கோயம்பேடு சந்தை?
கோயம்பேடு சந்தை?


இதுபோன்ற அசாதாரண சூழலைச் சமாளிக்க அரசு பல நடவடிக்கைகளை எடுத்துக்கொண்டுதான் இருக்கிறது என்றாலும், அரசாங்கம் செய்யும் உதவிகள் `தேவைக்கு குறைவாகவோ இருக்கின்றன. அரசின் உதவிகள் முழுமையாக மக்களைச் சென்றடையவில்லை உள்ளிட்டவையும் இதில் பெரும் பிரச்னைகளாக இருக்கின்றன. இந்த நிலையில், மத்திய அரசு கொடுத்த அறிவிப்பின்படி கூடுதலாக 14 நாள்கள் ஊரடங்கு அறிவிப்பு மக்களை இன்னும் கலங்கச் செய்துள்ளது. அரசும் மக்களின் வாழ்வாதராத்தைச் சீராக்கச் செய்வதறியாது நிற்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. மனிதனை மனிதனே பார்த்து ஒதுங்கும் இந்தச் சூழலில்கூட, மனித நேயம் மட்டுமே மக்களைத் தொடர்ந்து இயங்கச்செய்யும் ஒன்றாக பல இடங்களில் இருந்து வருகிறது.
ஒரே நாளில் 27 பேருக்கு கொரோனா தொற்று! - ஹாட்ஸ்பாட் ஆகிறதா கோயம்பேடு சந்தை?
ஒரே நாளில் 27 பேருக்கு கொரோனா தொற்று! - ஹாட்ஸ்பாட் ஆகிறதா கோயம்பேடு சந்தை?
இயற்கை தன் வலிமையை மனித இடத்தில் காட்டி, பேரழிவுகளை உண்டாக்கிய சூழலில் எல்லாம் மனிதம்தான் அந்தச் சூழலைச் சரிசெய்ய கரம் நீட்டியது. கொரோனா நேரத்திலும் தங்கள் உயிரைப் பணயம் வைத்து பலர் தங்களால் முடிந்த உதவிகளை மக்களுக்குச் செய்து வருகின்றார்கள். அப்படி உதவி செய்யும் மக்களுக்கு அரசு கடந்த மாதம் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தது. ஒவ்வொரு மாவட்டத்திலும் இருக்கும் காவல்துறையின் மூலமாகத்தான் உதவ வேண்டும் என்றெல்லாம் அறிக்கை வெளியிடப்பட்டது, மக்கள் பசி தீர்க்க கரம் நீட்டியவர்களும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டதால் மக்கள் இன்னும் இக்கட்டான சூழலுக்குத் தள்ளப்பட்டனர். அதன்பின் சில தளர்வுகள் அளிக்கப்பட்டன.