கல்வி
கல்வி


ரகுவின் மகன் ராம் ஐந்தாம் வகுப்பு படித்துக்கொண்டு இருந்தான் .அவன் படிப்பில் படுசுட்டி.
ஆனால் தீய நண்பர்களின் சேர்க்கையால் தீய பழக்கவழக்கங்கள் அவனிடம் இருந்தது.
ஒரு நாள் ரகு தன் நண்ப ன் வேணுவிடம் நீதான் நீதிபோதனை பிள்ளைகளுக்கு கற்றுக் கொடுப்பாயே எப்படியாவது என் மகன் ராமை திருத்தி விடு என்றார் .
மேலும் சரி என்று ஒப்புக் கொண்டார்.
மறுநாள் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை ஆனதால் ராமை கூட்டிக்கொண்டு வெளியே சென்றார் .
சென்றபோது ஒரு குறுங்காடு குறுக்கிட்டது. ஒரு சிறு செடியை காட்டி பிடுங்கு என்றார். ராமுவும் சுலபமாக பிடுங்கி எறிந்து விட்டான்.&nb
sp;
சற்று தூரம் சென்ற பின் ராமுவிடம் ஒரு செடியை காட்டினார்.
ராமுவும் சற்று பிரயத்தனப்பட்டு பிடுங்கி எறிந்து விட்டான் .
இன்னும் சற்று தூரம் சென்றதும் சற்று முற்றி மரமாகி கொண்டிருந்த ஒரு செடியைப் பிடுங்க சொன்னார் .
ஆனால் ராமு பிடுங்க முடியவில்லை.
இப்போது வேணு சொன்னார்.
இளமையில் கல்வி கற்க வேண்டும்.
கெட்ட பழக்க வழக்கங்களை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும். என்று பழமொழி.
எனவே தீய பழக்க வழக்கங்களை அடியோடு அறுத்து எறிய வேண்டும். சிறுவயதிலேயே இல்லை பெரியவனாகி கிள்ளி எறியலாம் என்றால் ,இந்த மரத்தை பிடுங்குவது எவ்வளவு கடினமோ அவ்வளவு கடினம் ,கெட்ட பழக்கவழக்கங்களை தூக்கி விடுவது என்று புத்திமதி கூறினார்.