anuradha nazeer

Drama

5.0  

anuradha nazeer

Drama

காத்திருப்போம்

காத்திருப்போம்

3 mins
341


அமுதா ஒரு பேரழகி.

 அழகு என்றால் அப்படி ஒரு அழகு 

கொட்டிக் கிடக்கிறது. அழகு.

    அவளின்   குணமும்  தங்கம்.

குரலில் அப்படி ஒரு இனிமை.வளமை.

 அவர் குரலை கேட்டாலும் உடனே மயங்கி விடுவர்.

சர்வ லட்சணங்களும் பொருந்திய அவளொரு குணவதி.

மேடைப் பாடகி.

கதா காலட் சேபம் செய்பவள்.

பருவ மங்கை.

இவள் பாட்டைக் கேட்டு  ரசிக்காதவர்கள்  கிடையாது.

அவள் குரலை யார் கேட்டாலும் மயங்கி விடுவார்கள்.

அமுதா குரல் கேட்டு ரசிக்காதவர்கள் கிடையாது.

கந்தர்வ இசை.

அமுதா இசைக்கு தலையை ஆட்டி ரசிக்காதவர்கள்  கிடையாது.

   தலை   ஆட்டாதவர்களே கிடையாது 

  என்று அழுத்தமாகச் சொல்லலாம்.

 சுண்டியிழுக்கும் இசை.

 காலை தட்டி தாளம் போடாதவர்கள் கிடையாது.

அமுதா கச்சேரி என்றாலே அரங்கம் நிரம்பி வழியும்.


இப்படித்தான்    சேகர் அவளது சங்கீத கச்சேரியை கேட்பதற்காக சென்றிருந்தான்.

ஆனால் சபை எங்கும் நிரம்பிய கூட்டம்.

அவனுக்கோ டிக்கெட் கிடைக்கவில்லை. நண்பர்கள் அமுதாவின் குரலை அப்படி புகழ்ந்து பேசியதை, கேட்டே தீர வேண்டும் என்று வந்தவனுக்கு ஏமாற்றம் காத்திருந்தது.

எப்படியாவது கச்சேரி கேட்க வேண்டும் என்று வெளியிலேயே காத்து இருந்தான் .

கச்சேரி தொடங்கியது.

முதலில் இறைவணக்கம் பாடினாள்     அமுதா. 

அதன்பிறகு கச்சேரி தொடர்ந்தது.

பலவகை இனிமையான பாடல்கள். அற்புதம். அதிமதுரம்.

பயங்கர கரகோஷம்.

அருமையான ஒரு காதல் பாடலில் ஆரம்பித்தாள்.

அடுத்தடுத்து நேயர் விருப்பப் பாடல்கள்.

அருமையாக பாடினாள்.

அதி அற்புதமாக பாடினாள்.

    வர்ணிக்க வார்த்தைகளே இல்லை. கவிஞர்களுக்கு பஞ்சம் ஏற்படும்.

 அமுதாவை வர்ணிக்க இயலாமல். நின்றுகொண்டு பாட்டை கேட்டுக் கொண்டிருந்த அவன் மெய்மறந்து தன்னையும் மறந்து விட்டான்.

பாட்டுக் கச்சேரி முடிந்து எக்ஸ்க்யூஸ் மீ என்ற குரலை கேட்டு தலையை நிமிர்ந்து பார்த்தால், ஆச்சரியம்!!அங்கே அமுதா வந்து கொண்டிருந்தாள். 

 அந்த குரலுக்கு சொந்தக்காரி.

திரும்பத் திரும்ப அமுதாவின் கச்சேரிகளுக்கு செல்ல ஆரம்பித்தான்.

முதல் வரியிலேயே சீட்டு வாங்கிக்கொண்டு உட்கார்ந்து விடுவான்.

முன்கூட்டி டிக்கெட்டை புக் செய்து

 விடுவான். ஏமாற்றம் இல்லாமல் இருப்பதற்காக.

 நாளடைவில் அவள் கச்சேரியை கேட்காத நாட்களே இவன் ஏடுகளில் கிடையாது. என்று ஆயிற்று.

ஒருநாள் பாடகர் தேவை ,என போட்டி பாடலுக்கு ஆண் குரல் ஒன்று தேவையாக இருந்தது.

நண்பர்கள் சொன்னார்கள் சேகர் உன் குரல் இயற்கையிலேயே மிகவும் இனிமையானது.

நீ எப்படியாவது இந்த போட்டியில் வென்று விட்டால்உன் அழகு தேவதையுடன்   இணைந்து பாடுவதற்கு எதிர்காலத்தில் ஒரு வாய்ப்பு கிடைக்கும் என்றார்கள். போட்டியில் பங்கு கொள் என்று வற்புறுத்தினார்கள்.

ஆசை யாரை விட்டது ?

சேகரும் பங்கு கொண்டான்.

வேண்டாத தெய்வத்தை எல்லாம் வேண்டிக்கிட்டு, போட்டியில் ஜெயிக்க வேண்டும், என்று.

சில சமயங்களில் கனவுகள் பலித்துவிடும்.

அப்படித்தான் சேகரின் வாழ்க்கையிலும் நடந்தது .

போட்டியில் வென்று விட்டான்.

சடசடவென்று வாய்ப்புகள் குவிந்தன இருவரும் இணைந்து பாடினர்.

இருவருக்கும் நல்ல வருமானம். நல்ல வாய்ப்பு.

 நல்ல குரல் வளம்.நாட்கள் இனிமையாக சென்றது.

இருவர் மனதிலும் ஏ காதல் துளிர்விட்டது.

ஆனால் வெளியே ஒருவருக்கொருவர் சொல்லவில்லை.

 காதலர் தினம் நெருங்குவதால் ஒருவருக் கொருவர் தங்கள் கருத்துக்களை பரிமாறிக் கொள்ளலாம் என்று நினைத்துக் கொண்டனர்.

மனதிலேயே நினைத்துக் கொண்டனர். நாளை காதலர் தினம் .

நம் காதலை பரிமாறிக் கொள்ளலாம் என்று முதல் நாள் இரவு சேகர்அமுதாவிடம் தொலை பேசியில் பேசினார்.

இருவரும் தொலைபேசியில் பேசுவது சகஜம் தான் .

ஆனால் சேகர் சொன்னான் அமுதாவிடம் நாளை உன்னிடம் ஒரு முக்கிய விஷயம் பேச வேண்டும் என்று.

அவளும் அவனுடன் இன்று  சொல்லுங்களேன் என்று கேட்டாள் அமுதா.   இல்லை நாளை தான் இது பற்றி உன்னிடம் பேசுவேன் என்று கூறிவிட்டான்.

அவளுக்கும் மனமெல்லாம் படபடவென்று அடித்துக்கொண்டது.

காதலர் தினமும் வந்தது.

அன்று இருவருமே தனக்கு ஓய்வு வேண்டும் என்று எந்த பாடல் ஒளிப்பதிவும் வைத்துக்கொள்ளவில்லை.

இருவரும் தொலை பேசியில் பேசிய படி மாலை சிவன் பார்க்கில் சந்தித்துக்கொள்ள தீர்மானித்து இருந்தனர்.

அதன்படியே இருவரும் நன்கு அலங்கரித்துக் கொண்டு என்ன பேச வேண்டும் என ஒத்திகை பார்த்துக் கொண்டு கனவில் மிதந்தபடி  கற்பனை களோடு குஷியில் காரில் வந்து கொண்டு இருந்தனர்.

அப்போதுதான் எதிர்பாராத ஒரு சம்பவம் நடந்தது.

அழகான ஒரு குட்டி சிறுமி அம்மாவின் கைப் பிடியில் இருந்து துள்ளிக் குதித்து சாலை யோரம் வந்த போது எதிர் பாராத விதமாக ஒரு லாரி அந்த சிறுமியை அடித்து விட்டது.

அடுத்த லாரி அதிவேகமாக சென்ற போது சேகரின் காரையும் மோதி அவனை ரத்த வெள்ளத்தில் ஆழ்த்தி விட்டு சென்றது.

கூட்டம் எக்கச்சக்கமாக கூடிவிட்டது.

சேகர் ஒரு பிரபல பாடகர் .

ஆதலால்மக்கள் அவனை அடையாளம் கண்டு கொண்டு,அருகே இருந்த சூர்யா ஹாஸ்பிடலுக்கு அழைத்துச் சென்றனர்.

அவனோ மயக்கத்தில் இருந்தான்.

ஒன்றும் புரியவில்லை.

விஷயம் காட்டுத் தீ போல் பரவியது.

இதைக் கேள்வியுற்ற அமுதாவும் சூர்யாஹாஸ்பிடலுக்கு விரைந்து சென்றாள் .

ஆனால் அவள் கண்டதோ மயக்க முற்று அதிக ரத்தக் காயத்துடன் ரத்தப் 

போக்கு டனிருந்த சேகரை தான்.

 ஒன்றும் பேச முடியவில்லை.

 கண்களில் நீர் ஆறாக வழிந்தது.

கண்ணியமாக காதலர் தினத்தை கொண்டாட நினைத்த வர்களுக்கு இப்படியா ஒரு நிலமை ?வரவேண்டும்.

இருவருமே தன் காதலை பரிமாறிக் கொள்ளவில்லை.

உரிய நேரத்தில் இருவரும் சொல்லிக் கொண்டிருக்கலாம்.

 ஆனால் யாருக்காகவும் காத்திருக்காது என்ன செய்ய?

இப்போது அமுதா காத்திருந்தாள்.

கடவுளிடம் மன்றாடி கண்ணீர்விட்டு பிரார்த்தித்துக் கொண்டாள்.  

 சீக்கிரமாக சேகர் நல்லபடியாக

வீடு திரும்ப வேண்டும் என்று.   

இன்று நாமும் காத்திருப்போம் .

இரு நல்ல உள்ளங்களை ஆசிர்வதித்து இருப்போம்.


Rate this content
Log in

Similar tamil story from Drama