காபி பொடி
காபி பொடி


ஒரு ஊருல ஒரு சின்ன பொண்ணு இருந்தாளாமா,அவ அம்மா இறந்து போனதுனால அப்பா இரண்டாவது திருமணம் செஞ்சுடாங்க.கல்யாணம் செஞ்சுட்டு வந்த சித்தியோ கணவர் இருக்கும் போது ஒரு மாதிரியும் ,இல்லாத போது ஒரு மாதிரியும் நடந்தக்குவாங்க.அந்த சித்திக்கு ஒரு பொண்ணு இருந்துச்சு.அந்த பொண்ணு கிட்ட எல்லாமே இருந்தும் ,அக்கா மேல பொறாமையாம்.
ஒரு நாள் சித்தி அந்த பொண்ண எப்பவும் போல கடைக்கு காபி பொடி வாங்க அனுப்புச்சாம்.அந்த பொண்ணு காபி பொடி வாங்கிட்டு வர வழியில கால் தடுக்கி சாக்கடையில காபி பொடிய போட்டிருச்சாமா.சித்தி அடிப்பாங்கனு பயத்துலயே அழுதுட்டு வந்துச்சு.வீட்டிற்கு வந்ததும் காபி பொடி எங்கேனு சித்தி கேட்டாங்க.அந்த பொண்ணு நடந்தது எல்லாம் சொல்லுச்சு. உடனே சித்தி இதுதா சாக்குனு அந்த பொண்ண அடிச்சு தொரத்தி விட்டுருச்சு.
அந்த பொண்ணுக்கு எங்கே போறதுனு தெரியல.அழுதுட்டே போயிட்டு இருந்த போது அங்கே ஒரு எறும்பு தண்ணி பட்டு தத்தளிச்சுட்டு இருந்தது.அத காப்பாதிட்டு போனது அந்த பொண்ணு.பிறகு,ஒரு யானை காலிலே முள் குத்தி ரத்தம் வந்துச்சு.அந்த யானைக்கும் உதவுச்சு அந்த பொண்ணு.அப்புறம்,மழை அதிகமானதால் ஒரு பங்களா உள்ள அந்த பொண்ணு போச்சு.அங்கே அழுதுட்டே தூங்கிருச்சு,கொஞ்ச நேரம் கழிச்சு ஒரு குரல் கேட்டுச்சு, "போடட்டா! போடட்டா!".அதற்கு அந்த பொண்ணு என் தலையிலே போடு நா செத்து போறேன்னுச்சு.கடைசிலே பார்த்தா அது ஒரு பூதம்,புதையில் மேல ஆசை இல்லாத பொண்ணுக்கு ஒரு பெட்டி நிறையா புதையல கொடுத்தது.
தீர்ப்பு :நல்லத நெனச்சா நல்லதே நடக்கும்.