காசி யாத்திரை
காசி யாத்திரை


என் அம்மா அப்பா நீண்ட நாட்களாக காசி யாத்திரை செல்ல வேண்டும் என்று வேண்டிக் கொண்டனர் .அதன்படி அவர்கள் சதா என்னை கேட்டுக்கொண்டே இருந்தார்கள் . நச்சரித்துக் கொண்டே இருந்தனர் என்று கூட கூறலாம்.என்றே கூட சொல்லலாம். எப்படா? என்ன காசி கூட்டிட்டு போற .நான் சாகுறதுக்குள்ள அங்க போயி தீரனும்.கேட்கவே பாவமா தான் இருக்கு.சரிமா சிறுக சிறுக பணம் சேர்த்து, இந்த மாசம் கண்டிப்பா நம்ப போவோம் என்று கூறினேன். அப்போதுதான் எதிர்வீட்டு கீதாவின் அப்பா என் வீட்டிற்கு
வந்தார்.
என் தாயிடம் ,தந்தையிடம் அவர் கூறினார். கீதாவுக்கு கல்யாண வயதாகி மிகுந்த நாட்கள் ஆகிவிட்டது. வருகிறவர்கள் எல்லாம் என்ன செய்வீர்கள் என ,. .என்ன .போடுவீர்கள் என்று கேட்கிறார்கள். அழகாகத்தான் இருக்கிறாள். படித்திருக்கிறாள். அதற்காக ஓசியில கல்யாணம் செய்து கொள்வார்களா? என்ன? மினிமம் ஆவது நான் செய்ய வேண்டாமா அவளுக்கு கையில கால்ல ஏதாவது போட்டு அனுப்ப வேண்டாம் ?என்று
கல்யாணம் ஆகாமலே கீதா கிழவி ஆகி விடுவாரோ என்று பயமாக இருக்கிறது கீதாவின் அப்பா கூறினார்.
கீதாவின் அப்பா பரிதாபமாக பேசிக்கொண்டிருந்ததை கேட்ட எனக்கு ஷாக் அடித்ததுபோலிருந்தது. ஆயிரம் பொய் சொல்லி ஒரு கல்யாணம் பண்ணு என்று சொல்லுவார்கள் .பாவம் எதிர்வீட்டு கீதா .அவர் கூறியது என் மனதை என்னவோ செய்தது.
சரி நம்ப பிறகு காசிக்குச் சென்று கொள்ளலாம் .இப்போது இந்த பணத்தை கீதாவின் கல்யாணத்திற்கு கொடுத்து உதவுவோம் என்று என் அப்பாவிடமும் அம்மாவிடமும் சொன்னேன். அவர்களும் சரிப்பா ஒரு ஏழைப்பெண் மனதார நம்மை வாழ்த்தினால் நம்ம குடும்பம் மிக நன்றாக விளங்கியிருக்கும் .
கடவுள் என்ன கண்ணை குத்தவா போகிறார் என்று அவர்கள் கேட்டது என் மனதிற்கு ஆறுதலாக இருந்தது.என் பெற்றோர்கள் சம்மதித்தது எனக்கு மிக சந்தோஷமாக இருந்தது.
ஒரு ஏழைப் பெண்ணின் கல்யாணத்திற்கு உதவுவது
என்னஒரு அரிய விஷயம் அல்லவா?என்ன ஒரு சாமான்யமான விஷயமா ?
கடவுள் ஒன்றும் சொல்ல மாட்டார் அவர் பொறுத்துக் கொள்வார் என்று கூறினார்கள் .
என் மனதுக்கு சாந்தி ஆகியிருந்தது.