இந்து
இந்து


இந்து நண்பர் ஒருவர் முப்பது ஆண்டுகாலம் முஸ்லீம்பள்ளியில் வேலை பார்த்து மிக சந்தோசமாக ரிட்டயர்மென்ட் வாங்கினார்
அந்த ஹிந்து நண்பர் முஸ்லிம் பள்ளியை எந்த அளவுக்கு உயர செய்ய முடியுமோ அந்த அளவுக்கு செய்தார் .
அந்தப் பள்ளி காக்க பாடுபட்டு அயராது உழைத்தார்.
ஒரு இந்துவாய் ஆன்மீகத்தில் இருந்தபோதும் பிள்ளையாரின் பக்தராய் இருந்தபோதும் அந்த முஸ்லீம் பள்ளி பாடுபட்டு அனைத்து மக்களிடமும் வசூல் நன்கொடை செய்தார் .
அவரை நம்பி அந்த பள்ளியும் அந்தப் பொறுப்பை அவரிடம் ஒப்படைத்து தனது 80 ஆவது வருட காலத்தின் போது சதாபிஷேக பூஜை அவருக்கு நடந்தது.
நல்ல மனது இருந்தால் நல்ல உடல் ஒத்துழைப்புடன் திடகாத்திரமாக இருந்தார் .
அவரை மேடைக்கு அழைத்துச் சென்ற இரு புறமும் நண்பர்கள் முஸ்லீம் நண்பர்கள் ஆவார்கள்.
வாழ்வில் மனிதாபிமான நேயம் இருந்தால் இந்து என்ன? கிறிஸ்தவம் என்ன? இஸ்லாமியன் என்ன? எவரோடும் எவரும் கூற்று உணர்வாக மிக அன்போடு புரிதலோடு இருக்கலாம்..
மனிதநேயம் புனிதமானது.
ஜாதி சமயமெல்லாம் அதற்கு அப்பாற்பட்டது.