STORYMIRROR

Naveena Iniyaazhini

Romance Fantasy

2.7  

Naveena Iniyaazhini

Romance Fantasy

இங்கு உள்ளங்கள் பரிமாறுகிறது

இங்கு உள்ளங்கள் பரிமாறுகிறது

5 mins
212


ஒரு அழகான மாலைப் பொழுதில் இரண்டு மனங்களின் காதல் சங்கமும் ஆரம்பிக்கிறது விமான நிலையத்தில் இருந்து, இந்தக் கதையின் நாயகன் பெயர், விக்ரம். உயரமானவன், அவன் அழகு சூரியனின் பிரகாசத்தை கொண்டது.


அவன் விமான நிலையத்தில் இருந்து வந்து கொண்டிருக்கும் பொழுது அவன் பின்னே ஒரு குரல் கேட்கிறது "நில்லுங்கள் நில்லுங்கள்", அவன் திரும்பிப் பார்க்கிறான் அவனை நோக்கி ஒரு பெண் ஓடி வருகிறாள். அவளை பார்த்த அவனுக்கு ஒரு அதிர்ச்சி, ஏன் இந்த பெண் என்னை நோக்கி ஓடி வருகிறாள்?, என்று ஒரு குழப்பம்.


அங்கு இருந்து வந்தவள் அவனை தடுக்கிறாள். அவன் நடந்து வந்த பாதையில் ஒரு குழந்தையின் விளையாட்டுப்பொருள் கிடந்தது அதை அவன் மிதித்தால் அந்த குழந்தை அழும் என்பதால் அதை எடுக்கவே அவள் அங்கு இருந்து வந்தாள். அதை எடுத்த பின் அவள் அவனைத் தவிர சுற்றியிருந்த அனைவரிடமும் மன்னிப்பு கேட்டாள்.


அதன் பின் அவனிடம் மன்னிப்பு கேட்டு விட்டு இரண்டடி முன்னே எடுத்து வைக்க, அவளுக்குள் ஒரு சத்தம் அவளுடைய இதயம் துடிப்பதை அவளால் உணர முடிந்தது, அது ஏன் இவ்வளவு வேகமாக துடிக்கிறது? என்பதையும் அவளால் உணர முடியவில்லை.


அந்த இதயத் துடிப்பு அவளிடம் ஏதோ சொல்ல நினைக்கிறது...உடனே அவள் அவனைத் திரும்பிப் பார்க்கிறாள், ஆனால் அவன் அவளை மட்டுமே பார்த்துக் கொண்டே இருக்கிறான். அவள் அவனைப் பார்த்த நிமிடமே அவளை அறியாமல் அவள் கண்ணில் இருந்து எட்டிப் பார்த்தது ஒரு துளி கண்ணீர் அதன்பின் அவள் தன்னுடன் இருக்கும் ஒரு கிப்ட் பேக்கை எடுத்து அவனிடம் கொடுத்தாள்.


"திஸ் மை கிப்ட் பார் யூ" என்று சொல்லி தன் பெயரையும் சொல்லிக் கொண்டாள் ஐ அம் வர்ஷா என்று சொல்லி கிளம்பி விட்டாள். ஆனால் விக்ரம் அவள் சென்ற இடத்தை பார்த்துக்கொண்டு நின்றிருந்தாள். சில மணி நேரம் அவனை அறியாமல் அவனுக்குள் ஒரு புன்னகை அடுத்த நாள் காலை விக்ரம் அறையிலிருந்து போன் அடிக்கிறது ஆனால் அந்த போனை அவன் எடுக்காமல் தூங்கிக் கொண்டே இருக்கிறான்.


கனவுலகில் மிதந்து கொண்டே இருக்கிறான் தூக்கம் கலையவில்லை கனவும் கலையவில்லை அவனுக்கு திடீரென்று அவளுடைய முகம் அவன் கண் முன்னே தோன்ற சட்டென்று எழுந்து நின்றான் விக்ரம் எழுந்தவன் அவனுடைய போனை பார்க்கிறான் எந்த போனும் வரவில்லையே அப்புறம் எப்படி போன் அடிக்கிற சவுண்ட் கேட்கிறது என்று திரும்புகிறான்.


அங்கு வர்ஷா கொடுத்த கிப்ட் பேக்கிலிருந்து தான் போன் சத்தம் கேட்கிறது. உடனே அந்த பேக்கில் இருந்த போனை எடுத்து பேசுகிறான். ஹலோ யார் இது என்று அவனும் கேட்க எதிரே இருந்தவரும் ஹலோ யார் இது என்று கேட்கிறார்கள்.


இருவரும் தன் பெயரை சொன்னவுடன் நேற்று சந்தித்த நிகழ்வு அவர்களுக்குள் நினைவூட்டுகிறது. உடனே விக்ரமுக்கு வந்த சந்தோஷம் இருக்கே அளவு கடந்தது அவளை எப்படியாவது மீண்டும் பார்க்க வேண்டும் என்று என் மனசு அழைப்பாயா தானாகவே அந்த சந்தர்ப்பம் எனக்குக் கிடைத்து விட்டதா என்ற சந்தோஷத்தில் அவன் ஒரு பக்கம் துள்ளிக் குதித்துக் கொண்டிருக்கிறான்.


ஹலோ ஹலோ கேட்கிறதா கேட்கிறதா என்று அவள் கத்தி கொண்டு இருக்கிறாள். சட்டென்று வர்ஷாவின் தோழி ஒரு குரல் எழுப்புகிறாள் நேரமாகிறது நாம கோவிலுக்கு போகணும் என்று இவ்வளவு நேரம் வர்ஷா கத்துனது  அவனது காதில் விழவில்லை. ஆனால் கோவிலுக்கு போகவேண்டும் என்று ஒரு தோழி கேட்கும் வார்த்தை மட்டும் அவன் காதில் எப்படி விழுந்ததோ கேட்ட நிமிடத்தில் அவன் எந்த கோவில் என்று வர்ஷாவிடம் கேட்டான்.


அவளும் அதற்கான பதிலை சொல்லிவிட்டு இன்னைக்கு ஈவினிங் நாலு மணிக்கு நாம காபி ஷாப்பில் மீட் பண்ணுவோம் என்று சொல்லி விட்டு போனை வைத்து சென்றாள். அடுத்த நிமிடமே விக்ரம் போட்ட ஆட்டத்துக்கு சந்தோஷத்துக்கு அளவே இல்ல வர்ஷா பக்கத்திலிருந்து விஷ்ணு கோவிலுக்கு சென்றாள்.


அந்த கோவிலில் மொத்தம் 1500 படிக்கட்டுகள் ஏறி கொண்டே இருந்தவள் திடீரென்று என்ன நினைத்தாரோ தெரியவில்லை மீதமிருக்கும் படிகட்டில் மண்டி போட்டுக் கொண்டே ஏறினாள். அவள் ஏறி முடித்து எழுந்து நிற்கும் போது கால் தவறி அவள் கீழே விழ ஒருகை அவளைத் தாங்கி நிற்க வந்தது.


அப்போது அவள் கையில் இருந்த மாலை கீழிருந்து மேல் நோக்கி வீசப்பட்ட போது அந்த மாலை அவளை தாங்கி நின்றவரின் கழுத்தில் போய் விழுந்தது. கீழே விழுந்து விடுவோமோ என்ற பயத்தில் விழி மூடிய அவள் கண்கள்

திறந்து பார்த்தது ஓர் அதிர்ச்சியில் மீண்டும் கீழே அவள் தவற அந்நபரின் கழுத்தில் இருந்த மாலை மீண்டும் இவள் கழுத்தில் வந்து விழுந்தது.


அவளை தாங்கி மீண்டும் பிடிக்கையில் உடனே அவள் விக்ரம் நீங்க எப்படி இங்கே என்று அவள் கேட்க அதற்கு விக்ரம் நான் சும்மா தான் வந்தேன் என்றான். இருவரும் பேசிக்கொண்டே கோயில் பிரகாரத்தை சுற்றி வந்தனர். அன்று விசேஷ நாள் என்பதால் பக்தர்கள் கூட்டம் அதிகமாகவே இருந்தது.


ஆதலால் கூட்டநெரிசலில் இருவரும் பேசிக்கொண்டே நடை போட்டனர். அப்போது யாரோ ஒருவர் அங்கிருந்து ஓடி வர மீண்டும் வர்ஷாவின் மீது மோதினார். திரும்பவும் அவள் கீழே விழப்போனாள். அப்போது மறுபடியும் விக்ரம் அவளை தாங்கிப் பிடித்தான். அந்த நேரத்தில் கோவிலில் இருந்த யானை சாமி கழுத்தில் போடுவதற்காக அது தும்பிக் கையில் இருந்த மாலையை தூக்கி இருவரின் கழுத்தில் போட்டது போட்ட நிமிடத்திலேயே விக்ரமின் நெற்றியில் இருந்த செந்தூரத்தின் ஒரு சிதறல் வர்ஷாவின் நெற்றியில் வந்து தஞ்சம் புகுந்தது.


ஆனால் இதை சிறிதும் பொருட்படுத்தாமல் வர்ஷா என்னை மறுபடியும் மன்னித்து விடுங்கள் என்று சொல்லிவிட்டு, எங்கே என்னுடைய ஃபோன் என்று விக்ரமிடம் கேட்டாள். அதற்கு விக்ரம் நீ ஈவினிங் தான கேட்ட அதனால நான் ஈவினிங் தான் தருவேன் இப்போ என்கிட்ட உன்னுடைய போன் இல்லை என்று பொய் சொல்லி விட்டான்.


அதன்பின் இருவரும் அவரவர் வேலைக்காக வெளியே சென்றுவிட்டனர். ஈவ்னிங் நாலு மணிக்கு மறுபடியும் இருவரும் காபி ஷாப் சந்தித்தனர். முதன்முறை சந்திப்பு என்று கொஞ்சம் கூட தயக்கமில்லாமல் எத்தனையோ வருடங்களாக இருவரும் பழகியது போல் இருவருக்குள்ளும் ஒரு உரையாடல் ஒருவரை ஒருவர் பற்றி பேசிக் கொண்டனர். இப்படியே சில நாட்கள் ஓடியது.


மறுபடியும் ஒருநாள் இருவரும் அதே காபி ஷாப்பில் சந்தித்தனர் அப்போ விக்ரம் உஷாவிடம் ஒரு கிஃப்ட் பேக் கை கொடுத்தான் அதை வாங்கிய பின் அவள் நாளை காலையில் எனக்கு 11 மணிக்கு ஃப்ளைட் என்று சொன்னாள் அதைக் கேட்ட விக்ரமுக்கு என்ன சொல்ற அப்படின்னு திரும்பவும் கேட்டா.


வந்த வேலை முடிஞ்சிருச்சு அதனால நான் என்னுடைய ஊருக்கு கிளம்புறேன் அப்படின்னு சொல்லி விட்டு கிளம்பி விட்டாள். இருவரும் மனதிலும் ஒரு உரையாடல் ஆனால் அதை வெளியில் கேட்டுக் கொள்ளவில்லை. இருவரும் அவர்களுடைய இடத்திற்கு சென்றபின் அவரவர் கொடுத்த கிப்ட் பேக் ஐ ஓபன் செய்து பார்த்தார்கள்.


இருவரும் ஒரே பொருளை பரிமாறிக்கொண்டனர். அவள் கொடுத்த கிப்ட் பேக்கில் ஒயிட் கலர் ஷர்ட் இருந்தது. இவன் கொடுத்த கிப்ட் பேக்கில் அதே ஒயிட் கலர் டிரஸ் இருந்தது. இருவரும் ஒருவருக்கொருவர் மனதால் பேசத்தொடங்கினர். ஒரு புன்னகையுடன் அடுத்த நாள் காலையில் விக்ரம் வர்ஷாவை வழியனுப்ப ஏர்போர்ட்டுக்கு வந்தான்.


இருவரும் அவரவர் கொடுத்த கிப்ட் டிரஸை போட்டுக் கொண்டு வந்தனர். ஒருவரை ஒருவர் பார்த்ததும் இனம்புரியாத மனதினுள் காதல் சங்கமமானது அவர்களுக்குத் தெரியாமலேயே. அதன்பின் இருவரும் பேசிக்கொண்டே இருந்தனர். சிறிது நேரம் அதை அடுத்து வர்ஷா நேரம் ஆகிவிட்டது. நான் கிளம்புகிறேன் என்று சொல்லிவிட்டு அவள் போய் கொண்டு இருந்தாள்.


அப்போது ஒருவரை ஒருவர் திரும்பித் திரும்பிப் பார்த்துக் கொண்டு சென்றனர். ஆனால் அப்போதும் இருவருக்கும் தெரியவில்லை இது காதல் என்று ஆனால் காதலை ஏற்படுத்தும் மனதிற்கு மட்டும் தான் தெரியும். இது காதல் சட்டென்று வர்ஷா அங்கிருந்து விக்ரம் என்று கத்திக் கொண்டு ஓடி வந்தாள் வந்தவள், அவளிடமிருந்து ஒரு கிப்ட் பாக்ஸ் எடுத்து விக்ரமிடம் கொடுத்து விட்டு நான் போயிட்டு வரேன் என்று சொல்லி அவள் செல்ல உடனே அந்த கிப்ட் பாக்சை ஓபன் பண்ணி பார்க்கிறான்.


அதில் மிஸ்டர் வி என்ற பிரேஸ்லெட் செயின் இருந்தது அதை பார்த்த விக்ரமுக்கு ஒரு சந்தோஷத்துடன் துள்ளல் ஏற்பட்டது காரணம் அவனும் அவளுக்காக ஒன்று வாங்கி வந்தான் அதில் "மிஸ் வி "என்ற பிரேஸ்லெட் செயின் இருந்தது.


 இங்கே இருவரும் ஒருவருக்கொருவர் பொருளை பரிமாறுவதும் ஒன்று தான் இவர்களின் மனமும் ஒன்று தான் ஈருடல் ஓர் மனம் இரு மனங்களின் ஆத்மாக்கள் மட்டுமே முதலில் ஒன்று சேரும் அதன் பின் அவர்களின் அன்புகள் பரிமாறும் இதையடுத்து மனதில் உள்நுழைந்து இதயத்துள் தோன்றுவார்கள.

அதே போல தான் இவர்களும் மனதால் காதல் செய்வார்கள்



Rate this content
Log in

Similar tamil story from Romance