எது உண்மையான நல்வாழ்வு?
எது உண்மையான நல்வாழ்வு?
இந்த உலகம் ரொம்பவே வித்தியாசமான ஒன்னு சொல்லுலாம்.... அதே மாதிரி தான் நம்ப கதையில் இருக்கரவரும் அப்படி தான் ... இந்த உலகத்தில் இருக்க ஒவ்வொருதர்க்கு ஒவ்வொன்று மேல ஆசை, காதல், மோகம், விருப்பம், என்ற ஒரு சொல்லுக்கு பல பொருள் சொல்லாம்....
அப்படி எல்லாம் சேர்ந்த ஒருத்தர் தான் இவர்...
இவருடைய பெயர் மணிரத்தினம்... ஊரிலே பெரிய பணக்கார குடும்பத்தை சேர்ந்த ஒருத்தர்.... பல கோடி சொத்துக்களை வச்சிருக்கவர்... குபேரனுக்கே ஈடு கொடுக்கறளவுக்கு.... ஒரு நாள் இவர் தன்னுடைய வேலை விஷயமா வெளி ஊர் சென்று வந்து கொண்டு இருந்தார்... வரும் வழியில் ஒரு துறவியை சந்திக்கிறார்.....
அந்த துறவியை சந்தித்து ஆசி வழங்க வேண்டுகிறார்..... துறவியும் ஆசி வழங்குகிறார்..... முதலில் நீ இறப்பாய், அடுத்து உன் மகன் இறப்பான். பின்பு உன் மகனின் மகன் அதாவது உன் பேரன் இறப்பான் என்று ஆசி வழங்கினார் அந்த துறவி.... இதை கேட்ட அந்த செல்வந்தன் மணிரத்தினத
்துக்கு கோபம் உச்சியை தொட்டது.....
உன்னிடம் நல்ல இருக்க வேண்டும் என்று ஆசியை தான கேட்டேன்..... ஆனால் நீயோ அழிவை சொல்கிறாய் என்று கோபத்தின் சீற்றத்தை வெளிபத்தினான் மணிரத்தினம்.... அதை கண்டது துறவியார் சிரித்தார்..... பணம். சொத்து சம்பாத்திக்க மட்டுமே நீயும் உன் மூளையும் சிந்திக்குமா என்று சிரித்துக் கொண்டே வினா எழுப்பினார்.... இச்சொல்லை கேட்டு மீண்டும் கோபம் உற்றான் அவன்.... நீ மீண்டும் அறிவை இழக்கிறாய் நான் சொல்வதை பொறுமையாக கேள் என்றார் துறவி.....
நீ இறப்பதற்கு முன்பு உன் மகன் இறந்தான் அது உனக்கு வேதனை தரும்........ நீயும் உன் மகனும் இறப்பதற்கு முன்பு உன் பேரன் இறந்தால் அது உனக்கு மீளா துயரத்தையும் உன் தலைமுறைக்கு அழிவை உண்டாக்கும்..... ஆகையால் நீ உன் குடும்ப மக்களுடன் தலைமுறை தலைமுறையாக வளர வேண்டும் என்பதற்காக தான் நான் இப்படி ஆசி வழங்கினேன் தவிர நீ அழிவை சந்திப்பது என்பது எனது நோக்கம் கிடையாது..... ஒரு மனிதனின் வாழ்வு என்பது பணம் சொத்தின் மீது இருக்கும் மோகம் மட்டுமே நல்வாழ்வு ஆகாது.... குடும்பத்தின் தலைமுறை தலைமுறையாக வளருவதுமே நல்வாழ்வின் அடிப்படை முக்கியதுவமாகும்.......