சே சிவக்குமார்

Romance

4.5  

சே சிவக்குமார்

Romance

என்னுள் தொலைந்து கரைந்த காதல்

என்னுள் தொலைந்து கரைந்த காதல்

3 mins
265


ஒரு தேநீர் குவளைக்குள் கரைந்து கொண்டிருந்த சர்க்கரையை போல் இன்றும்அவன் வரவை எதிர்நோக்கி கரைந்து கொண்டிருந்தது, இந்த கார்கால மாலை பொழுது

காதல் - கார்காலம் -மாலை பொழுது

என்று இருக்கும் பொழுது மழையை மட்டும் ஏன் ஒதுக்கி வைக்க வேண்டும்?

ஆம்! அது என்னுடைய ஒரு கார்கால மழை பொழியும் மாலை பொழுது

என் காதலுடன்

நான் தினமும் அவனை இங்கே தான் பார்ப்பேன்

பதிலுக்கு அவனும்

ஆனால் அவன் பார்வையின் பதில் மட்டும் எனக்கு - புரியாத புதிர்

இன்று என் பெண்மை என்னை கேலி செய்தாலும் பரவாயில்லை 

அவன் அருகில் சென்று பேசி விடலாம் என்ற எண்ணம் எத்தனித்த போது

இதோ இப்பொழுது ஆரம்பமாகிவிட்டது என் பெண்மையின் கேலி

"முதலில் நீ அவன் அருகில் சென்று நில் பின்பு பேசுவதை பற்றி யோசிக்கலாம்", என்று 

சற்றென்று எனக்குள் ஒரு வெப்பச்சலனம் 

அந்த 16 டிகிரி குளிரூட்டப்பட்ட அறை எனக்கு மட்டும் 100 டிகிரி ஆக மாறியது

ஆமாம் அது அவன் வரவு தான்

சற்றே எனக்குள் உதித்த கேள்வி - 

"அவன் என்ன மைக்ரோவேவ் ஓ!?, என்னிடமிருந்து என் வெட்கத்தை ஒதுக்கி வைத்து விட்டு என் பெண்மை துளிகளை மட்டும் ஆவி ஆக்க தெரிந்த அசுரன் இவன் தானோ" என்று

ஒரு வழியாக

என் பெண்மையின் ஒப்புதலுடன் அவனை நோக்கிய என் பயணம்

ஒரு எறும்பு சர்க்கரை சிதறல்களை சுமந்து செல்வதைப் போல்

அவனைப் பற்றிய எண்ணச் சிதறல்களை குவித்து அதை மௌனமாய் மாற்றி சுமந்து சென்றேன்

இப்பொழுது நான் அவன் அருகில்.. இல்லை இல்லை மிக அருகில்... நேருக்கு நேர்

அப்பொழுது எனக்குள் உதித்த ஒரு ஒரு வரி கவிதை

"இந்த உலகத்தின் தொடக்கம் அவன் பின்புறத்தில் இருந்தும் இந்த உலகத்தின் முடிவு எனக்கு பின்னால் முடிவடைந்து விடக் கூடாதா?" என்று 

மெல்ல என் இதழ்கள் பிரிவதற்குள்

அவன் இதழ் விரித்து உதிர்த்த வார்த்தை

"ஹாய் நவீனா"

எனக்கு ஆச்சரியம் கலந்த சந்தோஷத்தில்

"என்னோட பேரு உங்களுக்கு எப்படி தெரியும்?"


“என்னங்க நம்ம காலேஜோட குயின் எ நீங்க தான் உங்க பேர் தெரியாம இருக்குமா? 

நம்ம காலேஜ்ல இருக்கிற ஒவ்வொரு டேபிளுக்கும் உங்க பேர் நல்லாத் தெரியும் சொல்லப்போனால் அந்த டேபிளும் உங்களை தான் தேடிட்டு இருக்கு நீங்க யாருன்னு”

"புரியலையே?"

ஒரு சிறு புன்னகையுடன் தொடர்ந்து அவன் பேசிய அடுத்த ஒரு நிமிட உரையாடல் நான் கண் கொண்ட செவிடாய் மாறிப்போனேன்

சே குவேரா சொன்ன வாசகம் இங்கே தவறாகிப் போனது -  

"நீ ஊமையாய் இருக்கும் வரை உலகம் செவிடாய் தான் இருக்கும்" 

சற்றே என்னை நானே உணர்த்து சுதாரித்துக் கொண்ட பொழுது

சிரிப்பைத் தவிர வேறு என்ன பதில் சொல்லி இருக்க முடியும் அவனது அந்த நீண்ட உரையாடலுக்கு

என்னை பற்றி நன்றாக புரிந்து வைத்துள்ளானோ அவன் என்று எனக்குள் நானே கேட்டுக் கொண்டேன் அவன் என் தொலைபேசி எண்ணை என்னிடம் கேட்ட பொழுது

சிறு கணப்பொழுது தாமதிக்காமல் அசடு வழிய என் தொலைபேசி எண்ணை கொடுத்து விட்டேன்

ஆனாலும் எனக்குள் ஒரு வருத்தம் அவன் என் எண்ணை கேட்டதற்கு பதில் அவன் என்னை கேட்டிருக்கக் கூடாதா என்று

பல கணப்பொழுது தாமதித்து அசடு வழியா 

"ஓகே உங்க நம்பர் எனக்கு கிடைக்குமா?"

அப்பொழுது ஆரம்பித்தவன் தான்

"ஓகே அதுக்கு ஃபர்ஸ்ட் நான் உங்ககிட்ட இரண்டு முக்கியமான விஷயத்தை சொல்லணும் அது தனியா மனசுல வச்சுக்கோங்க"


"நான் ஒரு ஜென்டில்மேன்

எனக்கு சிவாஜி கணேசன் மாதிரி நடிக்க தெரியாது

எனக்கு சின்னதம்பி ஒருத்தன் இருக்கான்

எனக்கு இந்த சன் டிவில வர்ற சீரியல் மாதிரி பெருசா நீளமா பேச தெரியாது"


"ஆனா நீங்க ரெண்டு விஷயம் சொல்லிட்டு நாலு விஷயம் சொல்றீங்க? அதுவும் புரியாத மாதிரி?"


"ஓகே இந்த நாலு விஷயத்துல ஏதாவது ஒற்றுமை இருக்கா?" என்று அவன் கேட்டான்


"ம்...ம்...புரியலையே?"

"ஓகே சூப்பர் அது உங்களுக்கு புரிஞ்சிட்டா நான் சொன்ன ரெண்டு விஷயம் புரிஞ்சிடும்"


"சரி நீங்க மூன்றாம் பிறை பார்த்திருக்கீங்களா?"


" ஓ! பாத்தேன் நேத்து இரவு என் வீட்டு மொட்டை மாடியில் இருந்து வானத்துல பாத்து இருக்கேன்"

சிறு புன்னகையுடன் அவன் "நான் கேட்டது படம்"

'ஓ... படமா அது நான் பார்த்து இருக்கேன்"

"அப்புறம் இந்த சிந்து பைரவி முள்ளும் மலரும்?"

"ஆமா பார்த்திருக்கேன்... பாத்திருக்கேன்"

"அப்புறம் இந்த மாருதி 800..."

"இப்படி ஒரு படம் வந்து எனக்கு தெரியாது"

"அது படம் இல்லைங்க காரு"

"அதுக்கு என்ன இப்போ அது ஏன் இப்ப வந்துச்சு?"

"அது எப்ப வந்துச்சுன்றதை விட அதுல எம் ஜி ஆர் படத்தோட பாட்ட போட்டுட்டு ஓட்டன சும்மா அப்படித்தான் இருக்கும்... மரண மாஸ்ங்க அது.

"நீங்க எப்பவுமே இப்படித்தானா? புரியும்படி பேசவே மாட்டிங்களா?"

"நான் காளிதாஸ் படம் மாதிரி புரியிற மாதிரி தான் பேசிகிட்டு இருக்கேன்"

"நான் வேணா M.S சுப்புலட்சுமி மாதிரி பாடி காட்டட்டா?"

"இப்ப நீங்க பேசுனதும் எனக்கு புரியல?"

"ஓகே இப்ப கடைசியா பேசுனது புரிஞ்சுட்டா திருப்பி அது யோசிச்சு பாருங்க உங்களுக்கு புரியும்"

"ப்ளீஸ் உங்க மொபைல் நம்பர் கேட்டா என்ன என்னமோ பேசுறீங்க?"

"அதான் நான் ஆல்ரெடி உங்ககிட்ட கொடுத்துட்டேனே"

"எப்போ!?"

"இப்பதாங்க... நம்ம பேசும் போது"

"சரி நம்ம நிறைய பேசுவோம் என் நம்பரை உக்காந்து யோசிச்சு கண்டுபிடிச்சு கூப்பிடுங்க இப்போ நான் வரேன்"

என்று சொல்லிவிட்டு அவன் சென்று விட்டான்.

என் இதயம் எனும் ரங்கா ராட்டினத்தின் நான்கடுக்கு பெட்டியில் ஒரு பெட்டியாய் அவனது இந்த கேள்வி கணைகளை சுமந்து கொண்டு சுற்றுத் தொடங்கியது.

அவன் தொலைபேசி எண்ணை கண்டுபிடித்து என்ன பெயர் கொண்டு பதிவு செய்வது என்ற கேள்வி தன்னைத் தானே இரண்டாவது பெட்டியாக மாற்றிக் கொண்டது.

அந்த ஆச்சரியமான தருணத்தில் அவன் பெயரை கேட்க நான் மறந்த பொழுது, இல்லை.. இல்லை.. என்னை நான் மறந்த பொழுது.

நிச்சயம் நான் அவன் தொலைபேசி எண்ணை கண்டுபிடித்து விடுவேன் என் ஆனந்த களிப்பு மூன்றாவது பெட்டியாக உருமாற்றம் பெற்றது.

ஆனால் எனக்குள் தொலைந்து கரைந்த அவனை என்ன பெயரிட்டு அழைப்பது இன்ற ஏக்கம் மட்டும் தொடர்ந்தது 

அதற்கு நான் முதலில் அவனுக்குள் தொலைந்து கரைந்த என்னை முதலில் மீட்டெடுக்க வேண்டும் இந்த மீட்பு படலம் நாலாவது பெட்டியாய்...

அவன் நினைவு என்னும் அச்சாணி என் இதயம் எனும் இந்த ரங்கராட்டினத்தை அச்சராமல் சுற்றிக் கொண்டிருக்கிறது.

கால ஓட்டத்தில் முதல் மூன்று பெட்டிகள் தங்கள் நிறைவின் அருளால் முழுமை பெற்று இறங்கிக் கொண்டது

எனக்குள் தொலைந்து கரைந்த அவனுள் தொலைந்து கரைந்த என்னை மீட்டெடுக்க முடியாமல் சுழன்று கொண்டிருக்கும் தங்கராட்டினம் நான்...


தொடரும்...


Rate this content
Log in

Similar tamil story from Romance