எண்ணம்
எண்ணம்


ஒரு தெரு வழியே பிச்சைக்கார வந்தான்.
ஒரு வீட்டுக்குள் இருந்து ஒரு அம்மா குழந்தையோடு வந்தாள்.
குழந்தை கையில் அரிசி கொடுத்து போடச் சொன்னாள் அதை வாங்கிக் கொண்டு அடுத்த வீட்டுக்கு வந்தான் பிச்சைக்காரன்.
அடுத்த வீட்டுப் பெண்ணும் தன் குழந்தையை அழைத்து அவள் கையால் பிச்சை போட சொன்னாள். கொஞ்ச நாட்கள் கழித்து இரு பெண்களும் இறந்து மேல் உலகம் சென்றார்கள் .
முதல் பெண்ணை சொர்க்கமும்இரண்டாவது பெண்ணை நரகமும் அனுப்பினார் நீதிதேவன்.இரண்டாவது பெண் நீதி தேவனிடம் கேட்டாள்விளக்கம்.
அந்த முதல் பெண் குழந்தையிடம் கொடுத்து தர்மம் செய்த மாதிரி தானே நானும் என் குழந்தையிடம் கொடுத்து தர்மம் செய்தேன் என்றாள்.
ஆனால் நீதி தேவனும் முதல் பெண் புண்ணியம் குழந்தைக்கு கிடைக்கட்டுமே என நினைத்தார்.
அதனால் அவளுக்கு சொர்க்கம். ஆனால் நீ உன் கையால் பிச்சை போட்டால் அதிகமாக அரிசி செலவாகும் என்று நினைத்து, குழந்தையின் கையில் பிச்சை போட்டதால் உனக்கு கெட்ட எண்ணம். ஆதலால் தான் புண்ணியம் கிடைக்க வில்லை என்றார்.
எண்ணம் போல் தான் வாழ்வு.