ஏழை மனிதன்
ஏழை மனிதன்


ஒரு சாதாரண ஏழை மனிதன் இருந்தார்.
அவரிடம் குறைந்த காசுகளை கையில் இருந்தன.
எங்காவது வேலைக்கு சென்று குடும்பத்தை காப்பாற்ற வேண்டிய சூழ்நிலை.
எங்காவது வேலைக்கு சென்று கை நிறைய காசு சம்பாதிக்க வேண்டும் என்ற குறிக்கோள்.
இந்த நிலையில் ஒரு ஐடி கம்பெனிக்கு அவர் வேலைக்குச் சென்றார்.
ஆபீஸ் பாய் எடுப்பதாக பேப்பரில் அட்வடைஸ்மென்ட் வந்திருந்தது .
அதைப் பார்த்த அந்த நபர் ஆபீசுக்கு சென்று கேட்ட கேள்விகளுக்கெல்லாம் தான்தான் என்று பதில் சொல்லிவிட்டு செலக்ட் ஆகி விட்டார்.
கடைசியாக அந்த மேனேஜர் இவரிடம் ஒரு கேள்வி கேட்டார் .உன்னிடம் செலக்ஷன் கார்டு அனுப்புவதற்கு முன் ஈமெயில் அட்ரஸ் என்று கேட்டார்.
அதற்கு அந்த வாலிபர் என்னிடம் இமெயில், செல்போன் எதுவுமே கிடையாது என்று சொன்னார். அதற்கு அந்த மேனேஜர் நீ வேலைக்கு லாயக்கில்லை .நீ வீட்டிற்குச் செல்லலாம் என்று வழியனுப்பி வைத்தார்.
இந்த நிலையில் அந்த வாலிபர் தன் கையில் இருக்கும் காசை கொண்டு ஏதாவது செய்தே ஆக வேண்டும் என்ற நிர்ப்பந்தமான சூழ்நிலையில்சில காய்கறி பழங்களை வாங்கினார் .
அதை சூப்பர் மார்க்கெட்டில் வாங்கி அதை சில்லறை வியாபாரிகளுக்கு கைவண்டி வாடகைக்கு எடுத்து அதில் விற்றார்.
இவ்வாறு ஒரு நாளைக்கு மும்மடங்கு லாபம் சம்பாதித்தார்.
இவ்வாறாக சம்பாதித்ததை மீண்டும் மீண்டும் காய்கறி பழத்தில் போட்டு பெரிய பணக்காரர் ஆகிவிட்டார்.
இப்போது அவரைப் பேட்டி எடுப்பதற்கு பல நிருபர்கள் வந்து பேட்டி கண்டனர்.
தாங்கள் எப்படி இவ்வளவு பெரிய பணக்காரர்
என்று கேள்வி கேட்டதற்கு அவர் நான் ஒரு எளிய ஏழை. எனக்கு கட்டாயமாக சம்பாதிக்க வேண்டிய சூழ்நிலை.
நான் கடுமையாக உழைத்து சம்பாதித்து பணக்காரன் என்று கூறினார் .
அதற்கு அவர்கள் உங்களிடம் ஈமெயில் இருக்கிறதா ?நீங்கள் சொல்வதைப் பார்த்தால் ஈமெயில் இல்லாமலே இவ்வளவு பெரிய செல்வத்தைத் தேடி சம்பாதித்த நீங்கள் ஜிமெயில் இருந்தால் இதை விட பல கோடி சம்பாதிக்கலாம் என்று கேட்டார்கள். அந்த நிருபர்களுக்கு அவர் கொடுத்த பதிலானது ஈமெயில் இருந்திருந்தால் நான் ஒரு ஐடி கம்பெனியில் ஆபிஸ் பாயாக இருந்திருப்பேன்.
ஈமெயில் இல்லாததால் தான் இன்று ஒரு பெரிய செல்வந்தராக இருக்கின்றேன் என்று பதில் கூறினார். வாழ்க்கையில் உழைப்பிற்கு என்றுமே உயர்வு உண்டு.இப்போது கடுமையாக உழைப்பது போல், கஷ்டப்படுவது போல் தோன்றினாலும் எதிர்காலத்தில் தான் ஒரு சிறந்த மனிதராக விளங்குகிறார் என்பதுஉண்மை, சத்தியம்,உழைப்பவர்கள் ஒருபோதும் தோற்றது இல்லை.