சுயநல புத்தி
சுயநல புத்தி


அழையா விருந்தாளி
ஒரு ஊரில் இரு சினேகிதிகள் இருந்தார்கள். அவர்களில் ஒன்றாக படித்தவர்கள். பல வருடங்களாக ஒன்றாக வேலை பார்த்தவர்கள். நெருங்கிய நட்பு. அதில் மீனாவும் ரமாவும். ரமா கொஞ்சம் கூச்ச சுபாவம் உடையவர். இப்படிஇருக்கும்போது மீனாவின் பழைய தோழி ஒருத்தி வீட்டிற்கு வந்திருந்தாள். ஏக விருந்து ,ஏக உபச்சாரம்.
அவள் இதுவரை படுத்துவிட்டால் ரமா தற்செயலாக அங்கே சென்றபோது மீனா அவளை கண்டுகொள்ளவே இல்லை.
எப்போதுமே ரமா வீட்டுக்குத்தான் மீனா வருவாள். ஒருபோதும் ரமா மீனா வீட்டிற்கு சென்றதே இல்லை.
அப்படி இருக்கையில் அழையா விருந்தாளியாக ரமா வீட்டுக்கு சென்றபோது மீனா எப்படி இருக்க வேண்டும்.
ரமா மனம் மிகவும் வாடியது.
இவளை ஒரு உண்மையான தோழி என்றல்லவா நினைத்திருந்தேன் ஆனால்
தன் சுய புத்தியை காட்டி விட்டாளே
ரமா வின் வீட்டிற்கு மீனா வரும்போதெல்லாம் அப்படி உபசரிப்பார்.
என் வீட்டில் இது பண்ணியிருக்கிறேன்.
அது பண்ணியிருக்கேன்
இந்த உன் கணவருக்கு எடுத்துப்போ உன் மகனுக்கு
எடுத்துப்போ. என்று அள்ளி அள்ளி கொடுப்பான் ரமா. தயாள சிந்தனை. மிகவும் நல்லவள். அப்பாவி
செய்ததை எல்லாம் அள்ளி அள்ளி கொடுப்பாள்.
அப்படி ஒரு தாராள மனம் இருக்கு. ஆனால் மீனாவின் சுயநல புத்தி அப்போதுதான் தெரிந்தது. இதுவும் ஒருவகையில் கூடாநட்பு தான். அவள் குணநலன்களை தெரியாமல் அறியாமல் நட்பு வைத்திருந்தது ரமாவின் தவறுதான்.
ரமா மிகவும் மனம் உடைந்து போனார். அவள் நெஞ்சு தாங்கவே இல்லை. மீனாவின் அவமதிப்பை. ஒன்றும் இல்லாதவள் அல்ல. அவள் மிகவும் செல்வம் படைத்தவர். பணக்காரி. ஆனால் கர்வம் இல்லாதவள்,அற்றவள்.