சொகுசு
சொகுசு


அது ஒரு உல்லாச கப்பல். சகல விதமான சொகுசு வசதிகள் நிரம்பிய ஆடம்பர கப்பல். ஆங்கிலத்தில் அதனை Cruise என்று கூறுவார்கள்.
ஒரு தடவை ஒரு (இந்திய) அரசியல் வாதி அந்த ஆடம்பர சொகுசு கப்பலை சில நாட்களுக்கு வாடகைக்கு எடுத்து தனது குடும்பம் / ஜால்ராக்கள் / பரிவாரங்களுடன் பயணம் செய்து மகிழ்ச்சியுடன் இருக்க முடிவு செய்தார். அவருடைய பரிவாரங்களில் மிக முக்கியமான உறுப்பினர் அவரது செல்ல நாய் ஆகும்.
பயணம் தொடங்கியவுடன் என்ன காரணத்தாலேயோ அந்த நாய்க்கு அந்த சொகுசு கப்பல் பிடிக்காமல் போயிற்று.
நாய் தானே ? (அதன் பாஷையில்) விடாமல் குரைக்க ஆரம்பித்தது. குரைப்பதை நிறுத்தவேயில்லை. யாரைப்பார்த்தாலும் சீறி குரைத்து அங்கும் இங்கும் ஓடி தாவி காலைத்தூக்கி கண்ட இடங்களில் உச்சா அண்ட் காக்கா போயிற்று. கப்பலில் இருந்த வெட்னரி டாக்டருக்கும் இந்த நாய் ஏன் இவ்வளவு அப்செட் ஆயிற்று என்று புரியவில்லை.
பயணத்தின் சந்தோஷமே கெட்டுப்போயி நாயின் நடத்தையினால் அரசியல் வாதி அப்செட் ஆக தொடர்ந்து அவரது பரிவாரங்கள் அண்ட் ஜாலராக்களும் அப்செட் ஆயினர் .
கடலைப் பற்றிய அனுபவ அறிவு பெற்ற இந்திய கடற்படை ஆஃபீசர் ஒருவர் நாயின் சேட்டைகளை அருவருப்புடன் கவனித்துக்கொண்டிருந்தார்.
அவர் ஒரு அரை மணி நேரம் இந்த நாயை என்னிடம் ஒப்படைத்தால் போதும். ஆட்டுக்குட்டி மாதிரி அடங்கி நடக்க வைத்துவிடுவேன். அதன் நடத்தையையே மாற்றிவிடுவேன் என்று கூற அது ஒரு ஜால்ராவின் காதில் விழுந்துவிட்டது.
ஜால்ராக்களுக்கே உரிய இலக்கண சுத்தமான விதத்தில் முன்னாள் கமாண்டர் கூறியதை அரசியல் வாதியின் காதில் ஓதி விட்டார்.
அரசியல் வாதி(யும்) ஒரு உறுமலுடன் முன்னாள் நேவி கமாண்டரை கூப்பிட்டு என்னய்யா என்னோட டாமியைப்பற்றி உனக்கு தெரியும் ?
அவன் சாப்பிடும் சாப்பாட்டின் விலை என்ன தெரியுமா?
உன்னோட சம்பளத்தை விட ஜாஸ்தியாக்கும். என்ன நினைத்துக்கொண்டு பேசுகிறாய் ? என்று குரைக்க ..சாரி.. கத்த,,,,
கமாண்டரோ மிகவும் கட்டுப்பாட்டுடன் நாயின் நன்மையைக் கருதி தான் சொன்னேன் என்றார்..
அப்படியா சரி இதோ என் டாமி ..
எங்கே அவனை சாந்தப்படுத்து என்று சவால் விட...
சார் உங்க நாய்க்கு அதிர்ச்சி வைத்தியம் தான் சரிப்படும் .. நான் என்ன செய்தாலும் அரைமணி நேரத்திற்கு நீங்கள் குறுக்கே வரக்கூடாது சம்மதமா என்று கண்டிப்புடன் கேட்க ஜம்பமாக ஓகே என்றார் .
கமாண்டர் அந்த நாயை பிடித்து அதன் உடலில் (நீரில் மூழ்காமல் இருக்க) ஒரு மிதவை தக்கையை (floater) அதன் உடலில் கட்டிவிட்டு ஒரு நாற்பது அடி நீள கயிற்றை நாயின் கழுத்தில் கட்டி தண்ணீரில் தூக்கி எறிந்தார்.
அரசியல்வாதியும் ஜால்ராக்களும் அதிர்ந்தனர். அவர்களை முப்பது நிமிடங்கள் கொஞ்சம் அடக்கிக்கொண்டு இருங்கள் ..
நாயின் பாதுகாப்புக்கு நான் பொறுப்பு என்றார்.
நாயும் தண்ணீரில் மிரண்டு போய் குரைத்துக்கொண்டே நான்கு கால்களாலும் பதற்றமாக நீச்சலடித்து ஊளையிட்டது.
இருபத்தொன்பதாவது நிமிடத்தில் கப்பலுக்குள் நாயை இழுத்து துவட்டிவிட்டு கதகதப்பான சொகுசு மெத்தையில் படுக்க வைத்து சுவையான சூப் மற்றும் அதற்கு விருப்பமான பிரத்யோக உணவுகளை கொடுத்தனர் . நாய் வாலட்டிக்கொண்டே சாப்பிட்டு பின்னர் அமைதியாக வளைய வந்து அரசியல் வாதியை நக்கியது .
அரசியல்வாதிக்கோ ஒரே ஆச்சரியம்.
என்ன மாயம் இது?
இவ்வளவு நேரம் வெறிகொண்டு குறைத்த நாய் இப்போ ஆட்டுக்குட்டி மாதிரி சாதுவாக இருக்கே .. எப்படிங்க என்று கமண்டரை கேட்க.. அது ஒண்ணுமில்லை சார் ..
தண்ணீரில் போட்டவுடன் தான் நாய்க்கு தண்ணீரின் சக்தியும் தன்னுடைய உயிருக்கு தண்ணீரில் எத்தகைய ஆபத்து இருக்கின்றது .. தண்ணீரை ஒப்பிடும்போது கப்பல் எவ்வளவு பாதுகாப்பானது என்பதை உணரத்துவங்கியுள்ளது என்றார் .