சமூகத்தின் நிலை
சமூகத்தின் நிலை


அதிகாலை பொழுது அவள் தெருவில் தூறு நாற்றம் வீசும் சாக்கடை பகுதியின் அருகில் ஒரு விலை உயர்ந்த கருப்பு நிற கார் வந்து நின்றது,
நேரம் கடந்து செல்ல, செல்ல மனித நடமாட்டம், காரில் இருப்பவர்கள் இறங்கவும் இல்லை, கார் அந்த இடத்தை விட்டு செல்லவும் இல்லை,
சூரியன் உதயமானது பால்காரனும், பேப்பர்காரணும், குழாயில் தண்ணீர் பிடிக்கும் சில பெண்களும் என்று தெருவில் அன்றாடமான நிகழ்வு,
வழக்கம் போல் வாசல் தெளிக்க அவள் கதவை திறந்தாள், அவள் கண்ணில் அந்த கார் தென்பட, பயந்து, பதட்டம் அடைந்து, வேகமாக உள்ளே சென்று கதவை அடைத்துக் கொண்டாள்,
வீட்டில் கனவனும், குழந்தையும் தூங்கி கொண்டு இருக்கின்றார்கள், என்ன செய்வது என்று தெரியவில்லை,
2 நிமிடம் கண்களை மூடி யோசித்தால், தீர்க்கமான முடிவெடுத்தாள், வீட்டில் கண்ணாடி உடைந்த நிலையில் இருக்கும் பழை பீரோவின் மேலே மறைத்து வைக்கப்பட்ட பையினை தேடி எடுத்தாள்,
கதவை மேல்ல திறந்தாள், வெளியில் வந்து எட்டிபார்த்தாள்,
அந்த கார் அந்த இடத்தை விட்டு நகரவில்லை,
கையில் வைத்திருக்கும் பையுடன் வேகமாக அந்த கார் அருகே சென்றாள், பதட்டமும், பயமும் அவளை நரக வேதனைக்கு தள்ளியது, காரில் முன்பக்க கண்ணாடி திறக்கப்பட்டு, ஒரு கை மட்டும் பையை எதிர்பார்த்து வெளியில் வந்தது, அவள் பையினை கொடுத்து விட்டு வேகமாக சென்று வீட்டின் கதவை அடைத்து விட்டு பெருமூச்சு விட்டாள்,
கார் அந்த தெரு வினை கடந்து மெயின் ரோட்டிற்க்கு சென்று விட்டது,
மகன் தூக்கம் கலைந்து எழுந்து வந்து அம்மா நிம்மி, எங்கம்மா போயிட்டு இன்னும் நம்ம வீட்டுக்கு வரலையா என்று அழுது கொண்டே கேட்டான், வந்துடும்பா என்று சொல்லி அவள் அவனை சமதானப்படுத்தி, அவனை பள்ளி செல்ல ஆயத்தப் படுத்தி வேலைக்கு செல்லும் கனவனுடன் பள்ளிக்கு அனுப்பி வைத்தாள்,
அவளும் வழக்கம் போல் வீட்டு வேலையினை பார்த்து முடித்துவிட்டு
பீடி சுற்றும் வேலையினை தொடங்கினால்,
மாலை நேரமானது குழந்தையினை பள்ளி சென்று அழைத்து வந்தால் கனவனும் வேலை முடிந்து வீடு திரும்பினான்,
பையன் அப்பாவிடம் நேத்துயேன்பா, அம்மா கூட சண்ட போட்ட என்று கோவத்துடன் கேட்டான், கனவன் உடனே அவளிடம் சென்று என்ன மன்னிச்சிடுமா, என் கூட வேலை பார்க்கிறவங்க தினமும் குடிப்பாங்க நா என்னைக்காது தான குடிக்கிறேன், குப்பை அள்ளுற வேலை
பாக்குறமே அந்த நாத்தத்துக்காவே தினமும் குடிக்கிறவன் எத்தனை பேர் தெரியுமா,நா உனக்கு உண்மையா தான இருக்கேன், உனக்கு தெரிய மா எதாவது செய்து இருக்கனா சொல்லு, வாரத்துல ஒரு நாள் உன்ட கேட்டு தான் குடிக்கிறேன், நேத்து கொஞ்சம் அதிகம் ஆகிட்டு, அதான் கொஞ்சம் கலாட்டா, உன் மேல உள்ள கோவத்த நம் வீட்டு பீரோ கண்ணாடி மேல காட்டிடேன்,
என்ன புரிச்சுக்கோம, இந்த உலகத்துல பெரிய இடத்துல வேலை பாக்குறவனுக்கும், என்ன மாதிரி குப்பை அல்லுர வேலை
பாக்குரவனுக்கும் ஒரே ஒரு வித்தியாசம் தான்,
நா செய்ற வேலைய உண்மையா காதலிக்கிறேன்,
அவங்க செய்ற வேலை மட்டும் இல்ல தன் மனைவியிட கூட கள்ளதானமா தன் காதலிக்கிறான்ங்க,
எனக்கு என் வேலையில உடம்புதான் சோர்ந்து வலிமையிலிந்துரும்,
அவங்களுக்கு மனசே சோர்ந்து இதயமே வலிமை இழந்திடும்,
கனவன் இப்படி பேசிக் கொண்டிருக்கும் பக்கத்து வீட்டில் உள்ளவர் நம்ம தெரு சாக்கடை முக்கு அதிகமாக தூறுநாற்றம் வீசியது என்ன தெரியுமா,
உங்க வீட்டு நிம்மி அதுல அடிப்பட்டு செத்துக் கேடக்கு,
அதனை கேட்டதும், தாயும், மகனும் பதறி அடித்து சென்று பார்த்தனர்,
மகன் கண்ணில் தாரை, தாரையாய் கண்ணீர் அம்மா என் நிம்மி, நிம்மி என்று அழுது உருண்டு விட்டான்,
அருகில் தாய் அவனை தேற்றிக் கொண்டு இருக்கின்றாள்,
அந்த நேரத்தில் தெருவில் அதே கருப்பு கலர்
விலையுர்ந்த கார் வந்தது நின்றது,
இவளுக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை,
கார் கதவு முன் கதவு திறக்கப்பட்டு, நல்ல சிகப்பு நிறத்தில் ஒரு நபர் இறங்கி வந்தார், தெரு மாந்தர்கள் அதனை கவனித்து வந்தனர், இறக்கிய அந்த நபர் அவளின் கைப்பிடித்து உன்னாலதாம என் பையன் உயிரோடு இருக்கான் என்று அழுது புலப்பினார்,
இதை கண்ட கனவர் மற்றும் தெருவாசிகள் அவரிடம் என்னையா நடந்து, சொல்லுங்கையா
என்று கேள்வி எழுப்ப, அவர் அழுதுக் கொண்ட சொல்ல ஆரம்பித்தார்,
என் பையன் நேற்று குடித்துவிட்டு வழி தெரியாமல் இந்த ஏரியா வழியாக தப்பான பெண்ணோடு காருல வேகமாக போகும் போது,
குடித்த முழு போதையில் இருந்த என் பையனிடம் அவள் சண்டை போட்டு எதிரே வந்த நாயினை தெரியாமல் அடித்துப்போட்டு, இந்த பகுதியினை விட்டு சென்று,
மெயின் ரோட்டிற்க்கு சொல்லும் போது, போதையில் வந்த ஒரு ஆசாமி
அவர் காரின் முன் நிற்க்க செய்வது அறிய மால் அந்த பெண் இதான் சந்தர்ப்பம் என்று காரில் இருந்த பையினை தூக்கி காரை விட்டு ஓட தொடங்கினாள்,
இதை கண்ட என் மகன் அவள் பின்னே போதையில் தடுமாரி ஓட, எதிரில் இருந்த ஆசாமி அவளை மடக்கி பிடித்து அவளிடம் இருந்து அந்த பையினை அவனிடம் கொடுத்தான், இருந்தாலும் அவன் கோவம் அடங்கவில்லை தன் காருக்குள் இருக்கும் ஆயுத்தால் அவளை தாக்க,
அவள் அலரி அடத்தி அந்த இடத்தை விட்டு
ஒடி விட்டாள்,
அந்த ஆசாமி சார் அவ போன போர இந்தாங்க சார் உங்க பையை என்று சொல்ல போடா அவளை கொல்லாம விட மாட்டேன், என்று பின் தொடரி விபத்தில் சிக்க,
வீட்டிற்க்கு வந்த கனவன் கலவரமும் சண்டையும் என்றும் போதையில் உளர அவள் புரிந்துக் கொண்டு மனைவி
பையினை பீரோ மீது வைத்து விட்டாள்,
விலைமாது என்று வினை தேடி சென்றவனுக்கு கிடைத்த பரிசு உயிர் மட்டுமே மீஞ்சியது,
விபத்தில் சிக்கி தவிர்த்த அவனுக்கு இரத்தம் கொடுத்தும் அவளே,
அவன் விட்டு சென்ற கைப்பை தேடி வருவார்கள் யாராயினும் அதை உரியவரிடத்தில் சரியாக சேர்ப்பதே என் கடமை.