சாலமன்
சாலமன்


ஒருமுறை சாலமோன் அரசர் தனக்கு நதிக்கரையோரம் ஒரு அழகிய அரண்மனையை கட்ட சொன்னார் .
பிறகு பார்வையிட்ட போது அதன் அருகே ஒரு ஓலைக் குடிசை அசிங்கமாக இருந்தது .
மந்திரியிடம் விசாரித்தபோது அவர் குடிசைக்கு சென்றார் .
அங்கு ஓர் ஏழைக் கிழவி மட்டுமே இருந்தாள்.
அவளிடம் மந்திரி வேறு இடத்தில் மாளிகை கட்டித் தருகிறேன்.
இந்த இடத்தை மன்னருக்கு விட்டுவிடு. என்றார்.
பணம் என்ன கேட்டாலும் மன்னர் தருவார் என்று மந்திரி கூறினார் .ஆனால் கிழவியும் என் உயிரினும் மேலானது இந்த குடிசை.
என் கணவருடன் நான் வாழ்ந்த இடம்.
இதுதான் என் சொர்க்கம்.
இது என்று கூறினாள்.
இந்த ஓலைக் குடிசையை யாருக்காகவும் விட்டு தர மாட்டேன் என்று அழுத்தம் திருத்தமாகக் கூறினாள்.
ராஜாவிடம் கூறிய போது விடுங்கள் நமக்கு அசிங்கமாக இருப்பது மற்றவர்களுக்கு அரிய பொக்கிஷம் என்றார்.
அதுதான் சாலமன் ராஜாவின் சிறப்பு பெருந்தன்மை.
இதனால்தான் உலகில் எல்லோருமே சாலமன் மன்னனை மிகவும் போற்றி ,சிறப்பாக கௌரவித்தனர்.