அவள் மார்கழி
அவள் மார்கழி


மாதங்களில் அவள் மார்கழி ,மலர்களிலே அவள் மல்லிகை என்ற பாட்டை முணுமுணுத்துக் கொண்டே வந்தான் அத்தை மகன் சேகர்.என்ன லவ் ஃபீல்.அதற்கு என்று ஒரு பருவம் இருக்கிறது.இருவருமே பூத்துக் குலுங்கும் பருவம் .அதுமார்கழி மாதம். காலை வேளையில் திலகம் வீட்டுவாசலில் பெருக்கி கோலமிட்டு குளித்து பூச்சூடி புன்முறுவலுடன் இருப்பாள் அந்தப்பெண் திலகம். இப்படி மார்கழி மாதத்திலே அவர்கள் காதல் இனிமையாக பூத்துக் குலுங்கியது.
தை பிறந்தால் டும்டும் கொட்டுமேளம் தான் என்று இருவரும் ஆனந்தமாக அன்றில் பறவைகள் போல் தெரிந்தார்கள்.ஐயகோ யார் கண் பட்டதோ தெரியவில்லை. திலகத்தின் அம்மாவிற்கு இந்த விஷயம் தெரிந்து அவளை தனியே பிரித்து கூட்டி சென்று விட்டார்கள்.திலகத்தின் அம்மாவிற்கு சேகர் திலகம் காதல் விஷயம் தெரிந்து அவளை தனியே பிரித்து பெங்களூர் கூட்டி சென்று விட்டார்கள்.ஏனென்றால்
சேகருக்கு ஒரு வேலை இல்லை.
சேகர் ஒரு வேலையில்லா பட்டதாரி.சேகருக்கு மாத சம்பளம் என்று ஒன்று இல்லை. அவன் தொழில்முனைவோராக இருந்து மாதம் ஒரு சம்பளம் பார்த்திருந்தாலும்காதலை திலகத்தின் அம்மா பிரித்து இருக்கப் போவதே இல்லை. மற்றும் இருவரும் வெவ்வேறு சாதியை சேர்ந்தவர்கள் என்ற சமூக பாகுபாடு இன்னும் உலகத்தில் நிலவி கொண்டுதான் இருக்கிறது. இதற்கு முடிவே இல்லையா.திலகம் அப்பா இல்லாத பெண்.
அவள் எதிர்கால வாழ்க்கை அம்மாவிற்கு ஒரே குழப்பம் சந்தேகம்,நினைத்தது ஒன்று, நடந்தது ஒன்று. இதுதான் வாழ்க்கையின் விதி என்பதா,இல்லை என்ன பெயர் சொல்லி அழைப்பது தெரியவில்லை!!!