அரசன்
அரசன்


காலத்திற்கு முன் ஒரு அரசன் இருந்தான் .
அவனுக்கு கட்டிடக்கலை மீது மிகுந்த ஆர்வம்.
வருடாவருடம். தன் அரண்மனையில் புதுப்பித்து ஏதேனும் மாற்றங்கள் செய்து கொண்டே இருப்பான்.
அழகிய அரண்மனையாக மாற்ற வேண்டும் என்பது அவனது நோக்கம். அவர்களும் எப்போதும் முகஸ்துதி பாடி ஒத்து ஊதிக் கொண்டு இருந்தனர்.
ராஜாவை யாரும் கண்டிப்பது கிடையாது.
ராஜா மீது அவ்வளவு பயம்.
ஒருமுறை ராஜா புதுமாதிரி அரண்மனையை மாற்றி அமைத்த போது எல்லோருமே பாராட்டி ராஜாவை முகஸ்துதி பண்ணிய வண்ணமிருந்தனர்.
ராஜாவிற்கும் ஏக திருப்தி .
ஆனால் ஒரு சாது மட்டும் மௌனமாக ஏதும் பேசாமல் இருந்தார். அவரிடம் சென்று ஏன் மௌனம் என்ன குறை இருக்கிறது? என்று கேட்டார்.
அரண்மனை பிரமாதம் தான்.
பல ஆயிரம் ஆண்டு தாங்கும் .
ஆனால் அதில் உள்ளவர்கள் நிரந்தரம் இல்லையே .
கொஞ்ச காலம்தான் வாழ்வார்கள் .
ஆனால் உன் அரண்மனை என்றுமே நிரந்தரம்.
பல்லாயிரம் ஆண்டு ஆயுளுடன் இருக்கும்.
வெறும் கையுடன் வந்து வெறும் கையுடன் தான் திரும்பப் போகின்றோம்.
அனைவரும் .
புண்ணிய காரியம் செய்.
முடிந்த அளவு மக்களுக்கு நல்லது செய் என்றார்.
நன்றி கூறிய பிறகு அரண்மனையை மாற்றம் செய்கின்றேன் .
மறுபடி மறுபடி புதுமைகள் செய்வதே இல்லை.
நல்ல கருத்துக்களை கூற ஒருபோதும் தயங்க கூடாது