anuradha nazeer

Abstract


5.0  

anuradha nazeer

Abstract


அரசிதழ் பதிவு பெற்ற அலுவலர்

அரசிதழ் பதிவு பெற்ற அலுவலர்

1 min 131 1 min 131

அரசிதழ் பதிவு பெற்ற அலுவலர்

கனவு காணாத மனிதன் வாழ்க்கையில் இருக்கவே முடியாது

கனவு கண்டால் தான் அவன் பெயர் மனிதன்.


ஆம், நானும் கனவு கண்டேன். என் சிறுவயதில்.எங்கள் குடும்பமும் மிகப் பெரிய குடும்பம். மூத்தவளாக பிறந்த நான் என் குடும்பத்தை காப்பாற்ற வேண்டிய சூழ்நிலை. என்ன செய்வது. எல்லோருமே சமுதாய கைதிகள் தான். கனவு மெய்ப்படும் என்று இருந்தேன். ஆம் கண்ட கனவு நிஜமானது. என் தந்தைக்கோ தன் குழந்தைகள் எல்லாம் மத்திய சர்க்கார் பணியில் அமரவேண்டும் என்று. அது போலவே நடந்தது நானும் தொலைக்காட்சி நிலையத்தில் பணி அமர்த்த பட்டேன். உலகமே தட்டாமாலை யாக என் கண்முன்னே சுற்றியது.


கேட்டது கிடைத்தது, நினைத்தது நடந்தது. ஆனாலும் நம்ப முடியாத மகிழ்ச்சி. அத்தனை பெரிய பதவி கிடைத்தது .ஆனால் என் தந்தையோ சிவலோகப் பிராப்தி அடைந்தார். வாழ்க்கையின் உச்சகட்ட மகிழ்ச்சியும் உச்சகட்ட துயரமும் ஒரே நேரத்தில் நடந்தது. அதை எவராலும் மறக்க முடியும், மறுக்க முடியும். மகிழ்ச்சியை அனுபவிக்க முடியாத ஒரு மலை போன்ற துயரம். ஆனால் பிறகு வாழ்க்கை, அந்த மகிழ்ச்சியின் எதிரொலிதான்.


Rate this content
Log in

More tamil story from anuradha nazeer

Similar tamil story from Abstract