அப்பாவை தேடி, நாடி!
அப்பாவை தேடி, நாடி!


கோரமங்கலா - ஆறு மணி அளவில்
“காலையில் நான் ஓர் கனவு கண்டேன்
அதை கண்களில் எங்கோ எடுத்து வந்தேன்
எடுத்ததில் ஏதும் குறைந்துவிடாமல்
கொடுத்துவிட்டேன் உன் கண்களிலே
கண்களிலே... கண்களிலே... “
இந்த பாடல் வரிகளோடு கண் திறக்கிறாள். காதிலோ, “தூக்கம் உன் கண்களை தழுவட்டுமே” பாடல் இன்னும் ஒலித்துக்கொண்டே இருக்க, பதறியடித்தபடி தூக்கம் கலைந்து சன்னல் வழி பார்க்கிறாள்.
இது சிங்கார சென்னை இல்லையே! ஒரு கடை பலகையில கூட தமிழை காணோமே! பேருந்து எங்கும் நிற்கமால் இப்பொழுது தான் விரைவு பேருந்தாக தெரிந்தது அவளுக்கு. மறுபடியும் தமிழை தேடாமல் தண்ணீர் குடித்தாள். திரும்பவும் சன்னல் வழி பார்த்தாள். கர்நாடக எல்லைக்குள் சென்று பல மணித்துளிகள் ஆகியிருக்கும். விழித்தபடி *கோரமங்கலா*
இங்க தானே இறங்க சொன்னா?! குழப்பத்துடன் அலைப்பேசியில் அவள் தோழியை அழைத்தாள். சந்தேகத்தை தீர்த்த வண்ணம் “நல்ல வேல எனக்கு கால் பண்ண.. நீ இறங்கு போற எடம் *லால்பாக்* “கோரமங்கல ன்றது என்னோட ஓபிஸ்”
பேச்சில் மிதமான கனட சாரல்!
ஒரு நிமிடம் எளிமையான சிங்கார சென்னை அவள் கண் முன் வந்து சென்றது. பயணத்தில் தொலைந்து விடுவாளோ என்ற ஐயத்தில் தன்னை தானே குழந்தை என்றே எண்ணினாள். கேலியும் கிண்டலுமாக ஒரு கல்லூரி மாணவ சுபாவம் இன்னுமும் வெளிப்படுகிறது.
இதெல்லாம் வண்ண வண்ண எண்ணமாய் நெஞ்சில் கோர்த்தபடி சன்னல் வழியே விழி பதிக்கிறாள். கடலில் விழுந்த கல், கடலில் பதிவது போல பதிந்த முகம். அந்த முகம். அதே கண்ணாடி கண்கள். சில விநாடிகள் கண்ணசைக்காமல். பெருமூச்சிழுத்தாள். மன பிராந்தி! துணிப்பை, கைப்பை எல்லாவற்றையும் அல்லி எடுத்து கழுத்தை திருப்பி அதே கண்களை பார்க்கிறாள். இம்முறை அறை நிமிடம் வரை.
பேருந்து அவளை திசை திருப்பியது. “சரி வந்த வேலையை பார்ப்போம்!” என்று அவள் தோழியை மறுபடியும் அழைத்தாள்.
லால்பாக் - காலை 06:45 அளவில்
கேட் 1 கிட்டே நிக்கு நான் வந்துட்றேன் என்றாள் தோழி. இந்த மொழி தமிழா கனடமா என்ற யோசிக்க ஆரம்பித்தாள்.
தோழியின் பெயர் காயத்திரி. எப்படி அவளை அடையாலம் காண்பது அவளிடமே கேட்டிருக்கலாமோ என்று பயப்பட தொடங்கினாள். முன்பின் தெரியாத ஊர் மொழி என அன்று காலை அவள் கண்ட அத்துனையும் புதிது. அந்த கண்ணாடி கண்களை தவிற! 15 நிமிடங்கள் காத்திருந்தாள். மற்ற மனிதர்கள் போலவே இவளும் காதுகளுக்குள் பாடல்களை கேட்டுக்கொண்டே அந்த சூழலை மனதில் பதிக்கிறாள். காரணம், அவளின் முதற் பயணம். தனிமை தழும்பியது. அவள் கவனித்ததவாது, Lalbag Biological Park சென்னை மெரினா போலவே காலை 06:50 மணி அளவிலும் காதலர்கள், வயது முதியவர்கள் என நடமாட்டம் தெரிந்தது. வழக்கத்திற்கு மாறான விநோதம் ஒரு குழந்தையை கூட காண முடியவில்லை. அப்படி ஒரு வாழ்க்கை முறை போல! காலை நடைப்பயிற்சி வரும் எவருமே தங்கள் குழந்தைகளின் தூக்கத்தை கலைக்க மாட்டார் போலும்! வழக்கம்போல இளநீர் காய்கறிகள் என அந்த நாகரீக அந்தஸ்த்தை உடைய பங்களூரூவிலும் பெட்டிக்கடைகள் உயிர் பிழைத்தன. பாலைவனத்தில் ஊற்று போல தமிழ் பேசுவோரின் சத்தம் ஏக்கத்தை தீர்த்தது. இவ்வளவு தமிழ் பற்று மிகுந்த இவள் ஆங்கிலத்திற்கு வாக்கப்பட்டு 16 வருடங்கள் ஆகிவிட்டது.
ரயில் பெட்டிகளை போலவே அத்தனை அடுக்கு எண்ணங்கள். அம்மாவுக்கு அழைப்பு விடுத்தாள். “அவள் முகம் கூட தெரியாது மா! ஏதோ ஒரு அசட்டு தைரியத்துல வந்துட்ட மாதிரி இருக்கு சரி பரவால நான் கத்துக்குகிறேன் இதெல்லாம்! சரி மா அப்புறம் கூப்பிட்றேன்” என்றாள். காத்திருந்தது அவளது அலுவலகத்தில் உள்ள தோழியின் அக்காவுக்காக. அடுத்த அழைப்பு அந்த முகம் தெரியாத காயத்திரிக்கு. அவளுக்கு எதிரே நின்றபடி அழைப்பை ஏற்றபடி காயத்திரி அவளை தேடியது கேலிக்கை கூற்று. எளிமையான புன்னகையுடன் அவளை அன்புடன் அணைத்து வரவேற்ப்பு விடுத்தாள். அவளை காத்திருந்த அந்த சில மணித்துளிகளில் எவ்வளவு எண்ணங்கள் ஓட்டம் பிடித்தது.
காலை டிபன் இங்கே சாப்ட்டு போலாம் நல்லா இருக்கும்னு சொன்னா மா அதான் சாப்பிட வந்தோம் என்று ஒரு கூவல் விடுத்தாள். அந்த இட்லி, மைசூரு பருப்பு சாம்பார் அதன்பின் சர்க்கரை குறைவாக ஒரு காபி என ஏக வீதம் அத்தனையும் புதிது. இந்த 24 வருடங்களில் அவளது முதல் தனிமையான பயணம். முதல் காதலை விட வயிற்றில் பட்டாம்பூச்சி அதிகம் உணர்ந்தாள். எளிமையான அந்த காலை உலகம் அவ்வளவு மோசம் இல்ல போல இருக்கு என்று நினைத்து பெருமதம் கொண்டாள்.
வண்ண தோற்றம் கொண்ட பங்களூரு அவளக்கு இப்பொழுதும் ஒரு கனவு தான். காரில் அமர்ந்து சன்னல் வழியே ரசிப்பதை மீண்டும் தொடங்கினாள். வீடு வந்து சேர்ந்த பின் அவளுக்கு என்று காயத்திரி ஏற்பாடு செய்திருந்த அறைக்கு சென்று சற்று ஓய்வு எடுக்கலாம் என்று கண் அயர்ந்தாள். அந்த முகம் கண் முன் வந்து போக, நினைவலைகளில் அவள் உறங்கியும் போனாள்.
அந்த முகத்திடம் தன் அலவலாவலை பேச முடியாத்தை எண்ணியபடி தூக்கம் தெளிந்து தன் நேர்முக தேர்வுக்கு ஆயத்தமாகிறாள். தொலைவில் இருந்தும் அருகில் உணர்வது ஒரு சில பந்தங்கள் தான். அதில் அவள் உணர்ந்த அந்த முகம், அவள் வாழ்க்கையின் ஒவ்வொரு அடி பட்டபோதும் அவளுக்கு பக்கபலமாய் வானம் கடல் போல புரிதல் கொண்டு எலியும் பூனையுமாய் சண்டையிட்டு, அவள் மனதில் பூகம்பம் வரும் வேலையில் எலி அதன் அடைக்கலம் தேடி ஓடுவது போல அந்த முகத்திடம் தஞ்சம் புகுவதென என அவள் தினம் மனதில் திருவிழா போல் பாவிக்கும் அவள் அப்பா!