அம்மா
அம்மா


ஒரு அம்மா ஒரு பிள்ளை.
படிப்பில் படு சுட்டியாக பள்ளிப்படிப்பு முடிந்தது.
ஒவ்வொரு வகுப்பிலும் முதல் ரேங்க்.
முதல் மார்க் என்று படிப்பில் அசத்துவார்.பள்ளிப்படிப்பு முடிந்ததும் அவன் கல்லூரியில் சேர்ந்தாள்.
அவன் ஊரிலேயே கல்லூரி இல்லாததால் அவனை நகரத்திற்கு அனுப்ப வேண்டியிருந்தது .
அப்போது அவன் அம்மா இனி என் கல்லூரிக்கு என் விடுதிக்கு எல்லாம் வராதே.
பள்ளியிலேயே எல்லோரும் கேலி கிண்டல் பேசுவார்கள் .
ஒத்த கண்ணம்மா என்று .
அதனால் நீ நகரத்திற்கு வந்து கல்லூரி விடுதியில் என்னை பார்க்க வேண்டாம் என்று பிடிவாதமாகக் கூறிவிட்டார்.
அம்மாவும் பெத்த புள்ளை சொல்கிறது வேறு என்ன செய்வது என்று சும்மா இருந்துவிட்டால்.
கல்லூரிப் படிப்பும் முடிந்தது.
பிறகு ஒரு நல்ல வேலை கிடைத்தது.
பிறகு பையன் தானேதன்னுடன் படித்த ஒரு பணக்காரப் பெண்ணை திருமணம் செய்து கொண்டான்.
அம்மாவை கூப்பிடக் கூட இல்லை.
கல்யாணம் முடிந்த கையோடு அம்மாவிடம் ஆசி வாங்க வந்தான்.
அப்போது அம்மா கூறினார்கள்.
மகனே உனக்கு என்றும் தீங்கு செய்யமாட்டான் .
எனக்கு ஒரு கண் எப்படி போவது என்று உனக்கு தெரியுமா?
நீ சிறு குழந்தையாய் இருந்தபோது மேலிருந்து கீழே விழுந்து ஒரு கண் பார்வை போய்விட்டது .
அப்போது மருத்துவர்கள் சொந்த ரத்தம் சொந்த சதை உள்ளவர்கள் கண் கொடுத்தால் . மட்டுமே பார்வை கொடுக்க முடியும்.
இல்லாவிட்டால் அவனுக்கு ஒரு கண் பார்வை போய்விட்டது என்றார்கள்.
பதறித் துடித்த நான் டாக்டரிடம் சென்று என் கண்ணை எடுத்துக்கொள்ளுங்கள் என்று உனக்கு என் கண்ணை தாரை வார்த்தேன். நீயோ என்னை ஒத்தைக் கண் என்றும் என் கல்லூரி வராதே, என் வராது என்றும் என்னை கல்யாணத்துக்கு கூட கூப்பிடாமல் விட்டால்.
பரவாயில்லை எங்கிருந்தாலும் என் மகன் நன்றாக இருக்க வேண்டும் என்று வாழ்த்தினார்.
பெத்த மனம் பித்து .
பிள்ளை மனம் கல்லு என்பார்கள்.
அது உண்மைதான் போலும்.
எத்துணை கிழவியாக தாயானாலும் அப்பொழுதும் தன் மகனே குழந்தையாகத்தான் பார்க்கிறாய்.
அவனை முதிர்ந்த வயதில் தேர்ச்சி பெற்றவனாக அவள் பார்ப்பதில்லை. என்றுமே அவளுக்கு அவன் குழந்தையாகத்தான் கண்ணுக்குத் தெரிகிறார்.