ஐயோ விடுங்க ப்ளீஸ்
ஐயோ விடுங்க ப்ளீஸ்
சமையல் அறையில் பூனை போல் நுழைந்த சுகு தன்னுடைய மனைவி எங்கே என்று தேடினான்.அறையின் ஓரத்தில் அழுக்குப் பாத்திரங்கள் இறைந்து கிடக்க ,அதைக் கழுவாமல் நின்று கொண்டு கைகளில் இருந்த கண்ணாடி வளையல்களை ஆர்வமாக வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்தாள்.இவனுடைய புதுப் பொண்டாட்டி மது.
இவன் அவளை கவனித்துவிட்டு ;பிறகு சத்தம் வராமல் பூனைபோல் நைசாக நடந்து போய் ,திடீரென்று பாய்ந்து பின்பக்கமாக இருந்து அவளை அணைத்துக் கொண்டான்.முதலில் திடுக்கிட்டாலும் பிறகு இவனைக் கண்டவள் சமாதானம் அடைந்து வெட்கத்துடன் நெளிந்து கொண்டு ""ஐயோ விடுங்க;அத்தை வந்துடப் போறாங்க"" என்று சிடுசிடுத்துக் கொண்டே இவனுடைய கைகளை விளக்க முயன்றாள்.
இவன் பதிலுக்கு கேலியாக சிரித்துக் கொண்டே "அம்மா வர மாட்டாங்க "என்று சொன்னான்.
இவனுடைய பிடியில் இருந்து நெளிந்து கொண்டே புரியாமல்"ஏன் "என்று கேட்டாள்.இவன் பதிலுக்கு மகிழ்ச்சியான புன்னகையுடன்
அம்மா வத்தல் காய வைக்க ,மாடிக்குப் போனதைப் பாத்துட்டுதான் நான் இங்கேயே வந்தேன் "என்று சொல்ல அவள் பொய்க்கோபத்துடன்
எதுக்கு...என்று கேட்டாள்.
இவன் கேலியாக சிரித்துக்கொண்டு "ஆங்..சாம்பார் வைக்க என்றான்.
அவள் பதிலுக்கு இவனுடைய கேலியைப் புரிந்து கொண்டு, பொய்க்கோபத்துடன் அதெல்லாம் வெச்சாச்சு..மொதல்ல நீங்க என்னை விட்டுட்டு இங்கிருந்து கெளம்புங்க...என்று சொன்னாள்.
இவன் அவளை விட்டு விட்டுவிட்டு கேலியாக சிரித்துக்கொண்டே அவளுடைய முகத்தைப் பார்த்து"அதுக்கா இவ்வளவு தூரம் கஷ்டப்பட்டு உன்னை கை பிடிச்சேன்..என்று கேட்டான்.அவள் புரியாமல் எரிச்சலாக இவனைப் பார்த்து என்ன.. கை பிடிச்சீங்க..என்று கேட்டாள்.இவன் பதிலுக்கு கேலியாக சிரித்துக் கொண்டே அவளுடைய முகத்தைப் பார்த்து மெல்லிய குரலில்
ஒண்ணே ஒன்னு...கன்னத்தில குடு போயிடறேன் என்று சொன்னான்.அதைக்கேட்டு மனதுக்குள் மகிழ்ந்தாலும் ,
அதையும் மீறி அவளுக்கு உடலில் ஒரு படபடப்பு வந்தது.மகிழ்ச்சியை வெளியே காட்டிக் கொள்ளாமல் பொய்க்கோபத்துடன் இவனை முறைத்துக்கொண்டே
கன்னத்தில கொடுக்கனுமா. அத்தைன்னு நான் ஒரு குரல் கொடுத்தா ,என்ன ஆகும்னு யோசிச்சுப் பாருங்க என்று சொன்னாள்.இவன் கேலிப் புன்னகையுடன் அவளைப் பார்த்து என்ன ஆகும்..என்று கேட்டான்.அவள் கலகலவென்று சிரித்துக்கொண்டே
அத்தை..வந்துருவாங்க
என்று சொல்ல ,இவன் திடுக்கிட்டு பரபரப்பாக மெல்லிய குரலில் கெஞ்சலாக
"அப்படின்னா அவங்க வர்றதுக்குள்ள ஒரே ஒரு முத்தம் கொடு; ஓடிப் போய்ற்றேன் "என்று சொன்னான். அவள் நாணத்துடன் தலையை குனிந்து கொண்டு "அதெல்லாம் முடியாது
ஆளை விடுங்க..என்று சொல்லிக்கொண்டே பின்னால் இரண்டடி நகர்ந்து அவன் பிடியில் மீண்டும் சிக்கிக் கொள்ளாமல் இருக்கும்படி உஷாராக விலக முயன்றாள்.அவன் விடுவதாக இல்லை.இவன் மீண்டும் அவள் பக்கம் பாய்ந்து அழுத்தமாக அவளுடைய கைகளை பிடித்துக்கொள்ள
இப்போது இவனுடைய முரட்டு புடியில் அவள் கையில் இருந்த கண்ணாடி வளையல் உடைந்து அவளுடைய கையை லேசாக கிழித்து விட்டது.
அவள் வலியில் "ஆ "என்று கூச்சலிட ,இவளுடைய குரலைக் கேட்டு மாடியிலிருந்து மாமியார் பங்கஜம் "என்னம்மா" என்று குரல் கொடுத்தார்.
அவளுடைய குரல் கேட்டதும் இருவரும் திடுக்கிட்டு கையை விட்டு விட்டு விலகி நின்றார்கள்.அவர்கள் மீண்டும் சத்தமாக என்னம்மா ஆச்சு என்று கேட்க ,இவள் படபடப்புடன்
அதுவந்து.. அத்தை..என்று இழுத்தாள். காரணம் பதட்டத்தில் உடனே அவர்களிடம் என்ன பதில் சொல்லி சமாளிப்பது என்று தெரியவில்லை.அவர்கள் மீண்டும் என்ன மது அங்கே சத்தம் என்று கேட்க ,இப்போது இவள் பதிலுக்கு
ஒன்னுமில்லை அத்தை ,பூனை "'என்று பொய் சொல்லி சமாளித்தாள்.அவளுடைய சாதுர்யமான பேச்சைக் கண்டு ,இவன் அவளைப் பார்த்து கேலியாக மெல்லிய குரலில் சிரித்துக்கொண்டு இருந்தான்.
பதிலுக்கு மாமியார் இளக்காரமாக சிரித்துக் கொண்டே"பூனைக்கா பயந்துட்டே.. நான் என்னவோ ஏதோன்னு நெனைச்சேன்.
விரட்டிவிடு போய்டும்''.என்று அங்கிருந்தே பதில் சொன்னார்கள்.
பதிலுக்கு இவள் இவனைப் பார்த்து பொய்க்கோபத்துடன் முறைத்துக்கொண்டே ""விரட்டினாலும் போக மாட்டேங்குது .சரியான திருட்டுப்பூனை அத்தை""என்றாள். அதைக் கேட்டு இவன் கலகலவென்று சிரித்துக் கொண்டு இருந்தான்.
பதிலுக்கு மாமியார் "அப்படியா இரும்மா. நான் கீழே வர்றேன் "என்று சொல்லிவிட்டு படியில் இறங்க ஆரம்பித்தாள்.
அதை ஜன்னல் வழியாக பார்த்துவிட்டு இவன் பக்கம் திரும்பியவள் கேலியாக சிரித்துக்கொண்டே
"இப்போ என்ன செய்வீங்க " என்று இவனைப் பார்த்து கேட்டாள்.இவன் பதிலுக்கு "அம்மா வர்றதுக்குள்ள ஒரு முத்தம் கொடுத்துடு"என்று மிரட்டும் தொனியில் சொன்னான். அவள் பொய்க்கோபத்துடன் இவனை முறைத்துக்கொண்டே
இல்லைன்னா "என்று கேட்டாள்.அவன் பதிலுக்கு கேலியாக
சிரித்துக்கொண்டே இல்லைன்னா"இந்த பூனை உன் கன்னத்தை நக்கிடும்" என்று சொல்லிக்கொண்டே அவளை தன்பக்கம் இழுத்தான்.
இப்போது படபடப்புடன் அய்யோ விடுங்க ,அத்தை வர்றாங்க.."என்று சொல்லிக்கொண்டே அவள் அவனிடம் இருந்து விலக முயன்றாள்.
இப்போது இரண்டாவது முறையாக அவளுடைய கையில் இருந்து மீண்டும் சில வளையல்கள் உடைந்து கீழே விழுந்தது.
படியிலிருந்து இறங்கிய மாமியார் டங்கென்று அப்பள டின்னை கீழே வைத்த சத்தத்தில் இருவரும் உஷாரானார்கள்.
அவர்கள் உள்ளே வருவதற்கும் ,இவன் சமையல் அறையில் இருந்து வெளியே வரவும் சரியாக இருந்தது.
இவனைப் பார்த்த பங்கஜம் புரியாமல் ஏண்டா நீ ஆபிசுக்கு போகலையா என்று கேட்டாள்.
இவன் திடுக்கிட்டு பிறகு அவளைப் பார்த்து இல்லைம்மா.லீவு போட்டுட்டேன் என்று சொல்ல ,சமாதானம் அடைந்தவள் பிறகு இரண்டு நொடி யோசித்து விட்டு ,
கோபமாக அதுசரி சமையல் கட்ல உனக்கு என்ன வேலை என்று கேட்டாள்.அவள் கேள்வியில் இவன் முதலில் தடுமாறினாலும் ,பிறகு நொடியில் சமாளித்துக்கொண்டு தயக்கத்துடன்
இல்லைம்மா தலைவலியா இருந்தது. அதான் ஒரு காஃபி கேக்கலாம்னு ரூம்ல இருந்து வந்தேன்.
எழுந்து வரும்போது ,சமையல் அறையில இருந்து ஏதோ சத்தம் கேட்டது.என்னன்னு பாக்கலாம்ன்னு வந்தேன்...என்று இழுத்து ஆனால் அந்த நேரத்தில்
சூப்பராக சமாளித்தான். கதையின் ஹீரோ அல்லவா.
அவள் பதிலுக்கு கோபம் எல்லாம் மறைந்து பட்டென்று அன்பு பொங்க "சரி மாத்திரை ஏதாவது போட்டியா என்று கேட்டாள்.
இவன் பதிலுக்கு"ஆம் போட்டேன் "என்று பொய் சொல்லியவன் நைசாக அவனுடைய அறைக்குக் கிளம்பினான்.
பின்னால் இருந்து டீயா..காஃபியாடா என்று அம்மாவின் குரல் கேட்டது.
இவன் பதிலுக்கு "காஃபிம்மா...என்று சொல்ல அவள் பதிலுக்கு
"சரி நீ ரூம்ல போய் ரெஸ்ட் எடு .போட்டதும் மதிகிட்ட கொடுத்து அனுப்புறேன் "என்று சொன்னார்கள்.
இவன் அறையில் போய் படுத்துக்கொண்டு ,புத்தகம் படித்துக்கொண்டு இருந்தான்.பத்து நிமிடம் கழித்து அவள் தட்டில் காஃபி பிஸ்கட்டோடு உள்ளே வந்தாள்.
அவள் தட்டை மேஜைமேல் வைத்துவிட்டு வெளியே போகத் திரும்பியதும், இவன் எழுந்து போய் பட்டென்று அவளை பின்பக்கமாக கட்டிக்கொண்டான்.அவள் வெட்கத்துடன் நெளிந்து கொண்டு இருந்தாள். இவன் கேலியாக சிரித்துக்கொண்டே "நல்லா மாட்னியா "இப்போ என்ன பண்ணுவ..என்று கேட்டான்.கதவு முக்கால்வாசி திறந்து இருக்க ,அவள் பதட்டத்துடன் "ஐயோ விடுங்க ,அடுப்பில பாலை வெச்சிட்டு வந்துட்டேன்"என்று சொல்லிக்கொண்டே இவனை விலக்கினாள்.
ஆனால் உண்மையான காரணம் மாமியார் திடீரென வந்து விட்டால் என்ன செய்வது என்று மனதுக்குள் யோசித்துக்கொண்டு இருந்தாள்
இவன் அவளை விடாமல் அவளிடம் வம்பு செய்து கொண்டு"பால் பொங்குறது மட்டும்தான் உனக்குத் தெரியுதா "என்று கேட்டான்.அவன் அணைப்பில் இருப்பது மனதுக்குள் மகிழ்ச்சியாக இருந்தாலும் வெளியே காட்டிக் கொள்ளாமல், எரிச்சலாக இருப்பதுபோல் காட்டிக்கொண்டு , கேலியாக வேற என்ன தெரியனும்..என்று கேட்டாள்.இவன் பதிலுக்கு எனக்குள்ள பொங்குறது எதுவும் உனக்குத் தெரியலையா என்று கேட்க அவள் கேலியாக சிரித்துக் கொண்டே அழுத்தமான குரலில் கேலியாக"என்ன சார் பொங்குகிறது "என்று கேட்டாள்.இவன் அவளுடைய காதில் குனிந்து மெல்லிய குரலில் "என்னுடைய காதல்தான் ;உன் கண்ணுக்குத் தெரியலையா என்று கேட்டான். அதைக் கேட்டதும் இவளுக்கு மனதுக்குள் சில்லென்று இருந்தது .பட்டென்று அவனுக்கு பதில் சொல்ல முடியவில்லை .
இருந்தாலும் வெளியே கேலிப் புன்னகையுடன் காதலுக்கே கண் தெரியாதுன்னு சொல்லுவாங்க..அப்படி இருக்க என் கண்ணுக்கு மட்டும் எப்படித் தெரியும் "என்று கேட்டாள்.
இவன் பதிலுக்கு பட்டென்று
"ஆனா என் கண்ணுக்குத் தெளிவாத் தெரியுது என்று சொல்லிவிட்டு கலகலவென்று சிரித்தான். அவள் புரியாமல்
என்ன...என்று கேட்க இவன் பதிலுக்கு கேலியாக சிரித்துக் கொண்டே இதுதான்..
என்று சொல்லிவிட்டு பட்டென்று அவளுடைய இடுப்பைக் கிள்ளினான்."அவள் வலியில் ஆவ் என்று கத்த ,இவன் அவளை வம்பு செய்யும் விதமாக மேலும் வேறு எங்கெங்கோ கிள்ளினான்.அவனுடைய கையைத் தடுக்க அவள் முயற்சி செய்ததில் இப்போது அவளுடைய கையில் இருந்த இரண்டு வளையல் உடைந்தது.
மெல்ல இவனுடைய பிடியில் இருந்து நழுவியவள் பிறகு நைசாக வெளியே ஓடிவிட்டாள்.
இவன் அறையிலேயே இருந்தான்.
இரவு வந்தது.உணவு முடிந்து அவன் படுக்கப் படுக்கைக்குப் போய் விட்டான். இவள் வேலை எல்லாம் முடித்துவிட்டு வர அரைமணி நேரம் ஆனது.அதுவரை காதில் ஹியர் போன் மாட்டிக்கொண்டு போனில் பாட்டு கேட்டுக்கொண்டு இருந்தான்.அவள் கதவைத் திறந்து கொண்டு உள்ளே வந்ததும் இப்போது அவளிடம் நெருங்கியவன் கேலியாக சிரித்துக்கொண்டே "காலையில இருந்து என்னை ஏமாத்திட்டு வந்தே..இப்போ எப்பிடி என்கிட்ட இருந்து தப்பிக்கப் போற...என்று கேட்டான்.
அவள் வெட்கத்துடன் தலையை குனிந்து கொண்டு நின்று கொண்டு "ஏதாவது ஏடாகூடமா பண்ணீங்க.அத்தைகிட்ட சொல்லிடுவேன்...என்றாள்
இவன் பதிலுக்கு கேலியாக சிரித்துக் கொண்டே "அதுவரை உன்னை விட்டாதானே "என்று சொல்லிக்கொண்டே அவளைப் பிடிக்க அவள் பக்கம் நெருங்க ஆரம்பித்தான்.திடுக்கிட்டு உஷாரானவள் இவன் கையில் சிக்காமல் இருக்கும்படி
அறையிலேயே ஓட ஆரம்பித்தாள்.இவன் துரத்த அவள் ஓட பிறகு பாய்ந்து அவளைப் பிடித்து விட்டான்.இவன் அழுத்தமாக அவளுடைய கையை பற்றிப் பிடிக்க இப்போது அவளுடைய கையில் இருந்த சில வளையல்கள் உடைந்தது.
பிறகு அவளை அலேக்காக இரண்டு கைகளாலும் அள்ளிக் கொண்டு போய் கட்டிலில் போட்டான்.அவள் வெட்கத்துடன் எழுந்திருக்க முயல இவன் அவளுடைய இரண்டு கைகளையும் பிடித்துக்கொண்டு அவள் கட்டிலிலிருந்து எழுந்து கொள்ளாதபடி அவளுடைய கைகளை அழுத்தினான்.அந்த விளையாட்டில் இப்போது அவளுடைய கையில் இருந்த சில வளையல்கள் உடைந்தது.
எழுந்து உட்கார்ந்து கொண்டு ,அவள் பேச ஆரம்பிக்கும் முன் ,இவன் மகிழ்ச்சியாக அவளுடைய கன்னங்களைத் தட்டி விளையாடிக்கொண்டு இருந்தான்.அவளுக்கு புரிந்து விட்டது. சார் ரொம்ப குஷி மூடில் இருக்கிறார். இதற்கு பிறகும் அவரை ஏங்க வைக்கக்கூடாது என்று.இப்போது அவள் கையில் இருந்த ஓரிரு வளையல்களையும் கழட்டி மேஜைமேல் வைத்தாள்.
இவனுக்குப் புரிந்து விட்டது. மேடம் போருக்குத் தயாராகி விட்டார்கள் என்று.
இவன் மகிழ்ச்சியாக அவள் எதிரில் உட்கார்ந்து கொண்டு, அவள் கைகளை எடுத்து தன்னுடைய தோளில் இரண்டு பக்கமும் போட்டுக் கொண்டான்.
அவள் வெட்கத்தில் தலையை குனிந்து கொண்டிருந்தாள்.இவன் மெல்ல அவள் அருகே நெருங்கி
முதலில் உச்சந்தலையில் அடுத்து நெற்றியில்.. பிறகு கன்னத்தில் என்று வரிசையாக முத்தம் வைத்தான்.
அவள் வெட்கத்துடன் நெளிந்து கொண்டு இவனை விலக்கி தலையை குனிந்து கொண்டே வாய் திறந்து பேசாமல் சுவற்றில் இவர்கள் இருவரையும் ஆர்வமாக வேடிக்கை பார்த்துக்கொண்டு , சுவற்றில் எரிந்து கொண்டிருக்கும் மின்விளக்கை கை காட்டினாள்.இவன் எழுந்து போய் அதை அணைத்து விட்டு மெல்லிய வெளிச்சம் தரும் நைட்லேம்ப்பை ஆன் பண்ணிவிட்டு வந்தான்.
அரை வெளிச்சத்தில் அவளைத் தூக்கி மடியில் உட்கார வைத்து அணைத்துக்கொண்டு,
அவளுடைய இரண்டு கைகளையும் எடுத்து தன்னுடைய கன்னங்களில் வைத்துக்கொண்டு மெல்லிதாக அவள் இதழ் பக்கம் நெருங்கினான். அவள் கூச்சத்தில் கண்களை மூடிக்கொண்டு வெட்கப்படுவது அந்த அரை இருளிலும் இவனுக்கு தெளிவாகத் தெரிந்தது. இவன் மெல்ல வேலைகளை ஆரம்பிக்க அவள் மனதுக்குள் மகிழ்ச்சியுடனும் வெளியே வெட்கத்துடனும் இவன் செய்வதை எல்லாம் ஆனந்தமாக ஏற்றுக்கொண்டாள்.
அதற்கு பிறகு நடந்த இவர்களின் ஏடாகூடமான சண்டையை..அரை இருளில் மேஜைமேல் இருந்து பார்த்துக்கொண்டு
இருந்த அந்த மீதி வளையல்களும் தாங்கள் காதலர்களாக பிறக்கவில்லையே என்று.. நினைத்துக்கொண்டு ஏங்கிக்கொண்டு இருந்தன.
இவர்கள் அவற்றை கவனிக்காமல் உணர்ச்சி வேகத்தில் தவறுதலாக தட்டியதில்..அவையும் தரையில் கீழே விழுந்து உடைந்து விட்டது.ஆனால் அதை இவர்கள் இருவரும் கவனிக்கவில்லை.
கவனிக்கும் நிலையிலும் அப்போது இவர்கள் இல்லை.
அதற்குப் பிறகு தூக்கம் இருவரையும் கட்டிப்போட்டது.
அணைத்தபடி உறங்கிப் போனார்கள்.
அதிகாலையில் தூக்கம் கலைந்து எழுந்தவன் எழுந்ததும் பக்கத்தில் உறங்கிக் கொண்டிருந்த அவளைப் பார்த்தான். அவள் இன்னும் உறங்கிக் கொண்டு இருந்தாள்.
எழுந்தவன் அவளுடைய தூக்கம் கலையாமல் இருக்கும்படி கவனமாக அவளுடைய கையைப் பிடித்து மெல்லியதாக ஆனால் அழுத்தமாக முத்தமிட்டான்.அவளிடம் ஒரு சினுங்கல் ஏற்பட்டதே தவிர தூக்கம் கலையவில்லை.
வலையல் இல்லாத அவளுடைய வெறுங்கைகளைப் பார்க்க சமையல் அறையில் அவள் கையில் இருந்த வலையல்களை ஆர்வமுடன் வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்தது இவனுடைய மனதுக்குள் ஞாபகம் வந்தது.இப்போது மீண்டும் அவளுடைய கைகளை நுட்பமாக கவனிக்க திடுக்கிட்டு போனான்.
காரணம் வளையல் உடைந்து அவள் கையில் மெல்லியதாக கோடு மாதிரி கீறி இருந்தது.
இப்போது இவன் அவளை அசைத்து மது என்று குரல் கொடுத்து எழுப்பினான்.
அவள் தூக்கக் கலக்கத்தில் கண்களைத் திறக்காமலே சலிப்பாக""என்னங்க" என்று கேட்டாள்.இவன் பதிலுக்கு மது,
வளையல் கீறி உன் கையில காயம் ஆயிடுச்சி. அதனால ஒரு வாரத்துக்கு கண்ணாடி வளையல் போடாதே ஓகே'என்று சொல்ல ,அரைத் தூக்கத்தில் அவள் கண்களைத் திறக்காமல் "ஊம் சரிங்க "என்று சொன்னாள்.
இவன் மகிழ்ச்சியாக அவள் கன்னத்தில் ஒரு முத்தமிட்டுவிட்டு ,மீண்டும் தூங்க ஆரம்பித்தான்.
காலையில் எழுந்து குளித்துவிட்டு ஆபிசுக்கு கிளம்ப ஆரம்பித்தான்.
அவள் தாமதமாக எழுந்தாலும் ,பிறகு இவன் ஆபிஸ் கிளம்ப இவனுக்கு உதவி செய்தாள்.இவன் கிளம்பி முடித்துவிட்டு வெளியே வரும்போது ,கதவருகே நின்று கொண்டு இருந்த அவளிடம் புன்னகையுடன்
சரி.. "கிளம்புறேன் மது, வரும்போது உனக்கு ஏதாவது வாங்கிட்டு வரனுமா என்று கேட்டான்.
இவள் பதிலுக்கு வெட்கப்பட்டுக்கொண்டு தலையை குனிந்து கொண்டு "கண்ணாடி வளையல் ஒரு டசன் வேணும்ங்க 'என்றாள்.
இவன் திடுக்கிட்டு புரியாமல் அவள் வெறும் கைகளைப் பார்க்க ,அவள் நிமிர்ந்து இரண்டு பக்கமும் மாமியார் வருகிறாரா என்று பார்த்து விட்டு, பிறகு இவனைப் பார்த்து விஷமமாக கண்ணடித்துவிட்டு தலையை குனிந்து கொண்டு சிரிக்க ஆரம்பித்தாள்.இவனுக்கு மனதுக்குள் ஏதோ புரிய ஆரம்பித்தது.
இவன் பொய்க்கோபத்துடன் அவளை முறைத்துக்கொண்டே உன்னை வந்து வெச்சுக்கிறேன்..என்று கண்களாலேயே சொல்லிவிட்டு புறப்பட்டான். காரில் ஏறும்போது திரும்பிப் பார்க்க அவள் நாணத்துடன் இவனைப் பார்த்து புன்னகையுடன் கையசைப்பது தெரிந்தது.
(( முடிந்தது ))
பெண்கள் கண்ணாடி வளையல்களை ஏன் அணிய வேண்டும்?
கூட்டுக் குடும்பத்தில் இருந்த பொழுது, யாருக்கும் தெரியாமல் கணவனுக்கு சிக்னல் கொடுக்கவும், மனைவி எங்கே இருக்கிறாள் என்று இருந்த இடத்தில் இருந்தே கணவன் அறிந்து கொள்ளவும், இல்லறத்திற்கு முன்னோர்கள் கண்டு பிடித்ததுதான் இந்த வளையல்கள்.
இரண்டாவது.. கர்ப்பிணிப் பெண்கள் இதை அணியும் போது.. வயிற்றில் இருக்கும் குழந்தை... அம்மா..தன்னுடன் இருக்கிறார் என்பதை எளிதாக புரிந்து கொள்ளும்.
அழகோடு ஆனந்தம்கூட.

