anuradha nazeer

Romance

4.1  

anuradha nazeer

Romance

ஆசைகளை கடந்து

ஆசைகளை கடந்து

2 mins
283


கடவுள் தூணிலும் இருப்பார், துரும்பிலும் இருப்பார் என்பார்கள். இருப்பினும் இறைவனை வழிபட அவரின் இருப்பிடமாக பல கோயில்களை முன்னோர்கள் கட்டி வைத்து வழிபட்டனர்.

கடவுளின் இருப்பிடமாக அந்த காலம் முதல் இந்த காலம் வரை கோயில்கள் பார்க்கப்பட்டு வரும் நிலையில், கோயில் கோபுரத்தில் ஏன் காமத்தை வெளிப்படுத்தும் வகையில் பல ஆபாச சிலைகள் இருக்கின்றன என பலரும் கேட்டும் கேள்விகளாக இருக்கின்றது. புனிதமான இடத்தில் ஏன் இத்தகைய சிற்பங்கள் என பலரும் யோசித்திருப்பீர்கள். முன்னோர்களின் செயல் அனைத்திலும் சிறந்த பின்னனி காரணங்களோடு தான் உள்ளன.


சரி கோயிலில் ஏன் காம சிற்பங்கள் என்பதை பார்ப்போம்.


கோயில்களில் வைக்கப்பட்டுள்ள இது போன்ற சிற்பங்கள் இரண்டு வகை காரணங்களுக்காக பார்க்கப்படுகின்றது.


முதல் காரணம்

முதல் காரணமாக தற்போதுள்ள அறிவியல் தொழில் நுட்பமும் அந்த காலத்தில் இல்லை, அதோடு இதுகுறித்து வெளிப்படையாக பேசிக் கொள்ளப்பட்டது இல்லை எனலாம். அதானால் அந்த காலத்தில் கோயில்களில் இது போன்ற சிற்பங்கள் வடிக்கப்பட்டன.




புதுமண தம்பதிகளை கோயிலுக்கு அனுப்பி வைத்து, தங்களின் இல்லற வாழ்வை எப்படி தொடங்க வேண்டும் என தெரிந்து கொள்ள ஏதுவாக இருக்க இது போன்ற சிலை செதுக்கபட்டதாக கூறப்படுகின்றது.



மகான் ஆகலாம்:

ஆபாச சிலைகள் ஏன் இருக்கின்றது என இரண்டாவது காரணமாக கூறப்படுவதில், “இது போன்ற சிலைகள் எல்லாம் கோபுரத்தின் கீழ் நிலையில் காட்சிப் படுத்தப்பட்டுள்ளன. காமம், ஆசை உள்ளிட்டவற்றை விடுத்து யார் கோபுரத்தை பார்க்கின்றாரோ அவரே உயர்நிலை அடைய முடியும் என்பதை குறிக்கும் வகையில் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன.



அதுமட்டுமல்லாமல் காமத்தை தூண்டு சிலைகள் மட்டுமே கோபுரங்களில் வைக்கப்படுவதில்லை. அதோடு பெண் கர்ப்பமாக இருப்பது போன்றும், ஒவ்வொரு மாதத்தில் குழந்தை எப்படி வளர்ச்சி அடைந்திருக்கும் என்பதை உணர்த்தும் வகையிலும் சிலைகள் உள்ளன.



மேலும் எந்த சாமிக்குரிய கோயிலோ அதற்குரிய அவதாரங்கள், திருவிளையாடல்கள் அடங்கி சிற்பங்களுடன் கோயில் கோபுரம் கட்டப்படுகின்றன.



இது போன்ற ஆசைகளை கடந்து வந்த சித்தர்களின் சிலைகளும் கோபுரங்களில் வைக்கப்பட்டுள்ளன”.


அதனால் கோபுரத்தில் இருக்கும் இது போன்ற சிலைகள் மீதான பார்வையை தாண்டி யாருடைய பார்வை கோபுரத்தின் உச்சிக்கு செல்கின்றதோ, அவர் மேன்மை அடைவார் என்று கூறப்படுகின்றது.


காம கோயில்:

மத்திய பிரதேசம் சத்தார்பூரில் அமைந்துள்ள கஜுராஹோ கோயில் காம கோயில் என அழைக்கப்படுகின்றது. இதில் பல்வேறு காமத்தை வெளிப்படுத்தும் சிற்பங்கள் வடிக்கப்பட்டுள்ளன. இதனால் இந்தியாவின் காம கோயில் என இந்தியர்கள் மட்டுமில்லாமல், வெளிநாட்டினரும் அழைக்கின்றனர்.


Rate this content
Log in

Similar tamil story from Romance