2020
2020


அம்மா அதிகாலை மூன்று மணிக்கெல்லாம், எழுந்திரு நேரமாகிறது, என்று எழுப்பி விட்டார்கள். எழுப்புகிறாள் ஏய் ? ஏய்.. வாசலில் வந்து எட்டிப் பார்த்தால் ஏகக் கூட்டம் திருவிழாவிற்கு திரண்டிருக்கும் மக்கள் போல.
என்னம்மா இன்று தீபாவளியா அதிகாலை எழுப்புகிறாய் என்றேன். வாசலில் எலிகாப்டர் காத்திருக்கிறது ஜனங்கள் எல்லாம் அதில்புறப்பட தயாராக காத்திருக்கிறார்கள். என்னடா பேசுகிறாய்.
நம்மால் அவர்களுக்கு நேரம் ஆக வேண்டுமா.புறப்படு அமெரிக்காவில் இருக்கும் உன் சித்தி வீட்டிற்கு செல்லலாம்.
வாராவாரம் சனி ஞாயிறு வரவில்லை என்றால் உன் சித்தி கோபித்துக் கொள்கிறாள். என்ன செய்ய?
அக்கா ஏன் இந்த மாற்றம் ? ஏன் தங்கை வீட்டிற்கு வர மாட்டேன் என்கிறாய் என்று என்னை அதிகாரமாக திட்டுகிறாள்.
ஆட்டோமேட்டிக் இஸ்திரி பெட்டியில் துணிகளை எல்லாம் வைத்திருக்கிறேன் அயன் செய்து வைத்திருக்கும்.பெட்டிகளில் துணி எல்லாம் அடுக்கி வைத்திருக்கும். லிப்ட் ஆபரேட்டர் இது பெட்டிகளை எல்லாம் ஹெலிகாப்டரில் ஏற்றி இருக்கும்.
ஏறு நேரமாகிறது. வாசலில் சென்று எட்டிப் பார்த்தால் வெள்ளிகளில் திபுதிபுவென்று திருவிழா போல கூட்டம்.
அம்மா இதோ நொடியில் ரெடியாகி விடுகிறேன். என்னை தரதரவென்று இழுத்து பாத்ரூமுக்கு சென்றது தானியங்கி ஷவர்.
எண்ணெய் இளம் சூட்டில் குளிப்பாட்டி விட்டு டவலால் துடைத்து விட்டது.
எனக்கு இதமாக மசாஜ் செய்து விட்டது. அந்த ஷவர் என்ன இது நம்ம நவீன உலகத்தில் இருக்கிறோமா காண்பது எல்லாம் கனவா நினைவா என்று புரியவில்லை.
உடனே அங்கிருந்த வேறு ஒரு ஷவர் என் உடல் பூரா பவுடர் அடித்து சென்ட் அடித்து டிரஸ் மாட்டி விட்டது.அதுவே என் தலை அலங்காரத்தையும் செய்து முடித்து.
கண்ணாடியும் எனக்கு காட்டியது.என் அழகை பார்த்துக்கொள்ள உயர கண்ணாடி காட்டியது.
இது என்ன விர்ச்சுவல் பாத்ரூம் ஆ என்று எனக்கு புரியவில்லை.
டேய் ராம் எழுந்திரிடா சண்டே 12 மணி ஆனாலும் எந்திரிக்க மாட்டேன்
காலை உணவு அருந்துவதற்கு என்று அம்மா அழைத்தார்கள்.
அப்போது தான் கண்களை கசக்கி கொண்டு எழுந்தேன் .
நான் கண்டதெல்லாம் கனவு.