யார் அவள்
யார் அவள்
வாழ்க்கையின் வட்டத்திற்குள் வழி தெரியாமல் ஓடிக் கொண்டிருந்த என்னை வாழக் கற்று கொடுத்தாள் அவள்......
வாழவே தகுதியற்ற என்னை வாழ்க்கை பாதையை செதுக்கி கொடுத்தாள் அவள்......
என் உறக்கத்திற்காக அவளின் உறக்கத்தை தொலைத்தவள் அவள்.....
என் உயிரணுவின் மூலம் புத்துயிர் தந்தவள் அவள்....
தாய்மைக்காக அழகை இழந்தவள் அவள்....
என் நண்பனாக, என் தோழியாக என் தந்தையாக உருமாறி என்னை செதுக்கிய அவள்....
தாய்க்கு பின் தாரம்.... இல்லை...
எனக்கு தந்தைக்கு பின் தான் தாரம்...
நீர் இன்றி வாழாது உயிரினம்....
அவள் இன்றி வாழாது என் மனம்....
அவள் தான் என் மனைவி......