வண்ண மலர்கள்
வண்ண மலர்கள்


மன்மதன் (வேனிலான்) தன் மலர்க்
கணைகளை எய்து அழித்தான்.
கணைகள் தைக்கப்பெற்ற அக்கொடுங்
கோலனின் உடம்பினின்று
பரவிய செங்குருதியைப் போன்று
சோலையில் புத்தழகு பரவியது.
சோலையில் தளிர்த்த மென்
தளிர்கள் செவ்வொளி பரப்பின.
செவ்வொளி பரந்த பூஞ்சோலையின்
தோற்றம் தன்பகைவனாகிய இருள்
புறத்தே வெளிப்படாமல் மறைந்து
வாழ்கிற இடம் இப் பூஞ்சோலை
கதிரவன் செவ்வரி ஊட்டியதைப் போல்
புறத்தே செவ்வொளி பரவியது.
பூஞ்சோலையில் பல வண்ண மலர்கள்
நிறைந்து நின்றன .