வேர்த்திரள்
வேர்த்திரள்


தொடமுடியா உயரத்தில் தொடர்ந்திடும் மலைகளும்
தொடவே மேகங்களும் தொடர்மழையென வீழ்ந்திடும்
வானுயுர மரமும் வானத்துக்கே போட்டியிடும்
வாடாதே இம்மரமும் வானம்வரை வளர்ந்திட்டும்
பரந்துவிரிந்த இடமெல்லாம் பச்சையாய் விரிந்திருக்கும்
பசுமையால் சூழ்ந்திருக்கும் பட்டாம்பூச்சி சிறகடிக்கும்
சேராத நிலத்தையும் சேர்த்திடும் ஓடையிடம்
சேராத விலங்கினமும் சேர்ந்தே தாகம்தீர்க்கும்
பார்க்குமிட மெல்லாம் பாம்புகள் நெளிவிருக்கும்
பார்த்திட மனதெல்லாம்
பாதுகாப்பை தேடியிருக்கும்
சிங்கம் புசித்திடும் சிறுமிருகமும் வாழ்ந்திடும்
சிறப்புமிகு யானையும் சிறந்தவழி கண்டிடும்
புலிகளும் வேட்டையிடும் புழுக்களும் ஊர்ந்திடும்
புசிக்கவே மீதியை புத்துயிரும் பிறந்திடும்
பழங்களும் விளைந்திடும் பறவைகளும் வந்திடும்
பறவைகள் இசையும் பரவசம் தந்திடும்
வண்ணமலர்கள் மலர்ந்திடும் வண்டுகளும் வந்திடும்
வண்டுகளின் ரீங்காரம் வயதையும் குறைத்திடும்
வசதிகள் எல்லாம் வசதியாக கிடைத்திடும்
வசிக்கும் இடமெல்லாம் வற்றாதே இயற்கைவளம்
மான்களும் வாழ்ந்திடும் மாடுகளும் மேய்ந்திடும்
மாறனும் சாய்ந்ததும் மயக்கமும் தந்திடும்
நிலவும் தோன்றிடும் நிலமகள் குளிர்ந்திடும்
நித்திரையும் சூழ்ந்திடும் நிலவொளியில் மிளிர்ந்திடும்