உணர்வுகள், அது நம்மை வழிநடத்தும்
உணர்வுகள், அது நம்மை வழிநடத்தும்
உன்னை பார்த்த முதல் நொடியில் என்னை காக்கும் கைகளை கண்டு மகிழ்தேன்,
என்னை யார் தாக்க முயன்றாலும் நீ என் நிழல் போல இருப்பதை எண்ணி பெருமித்ததென்,
நான் செய்யும் பிழைகளை பொறுக்கும் உன்னில் நான் பொறுமையின் சிகரத்தை கண்டு கருணை
கற்றேன் .
என் வாழ்வில் நான் வெற்றி பெற உறுதுணையாக இருந்தாய் ஒரு ஆசானாக உன்னை கண்டு வியந்தேன்,
நீ மட்டும் ஓய்வில்லாமல் உழைத்தாய் உன் கண்களில் தெரிந்தது ஒரு அக்னி சிறகை பார்த்து தைரியம் கொண்டேன்,
மற்றவர்களுக்கு உதவிசெய்யும் உன்னை பார்க்கும் பொது மனம் ஆனந்தத்தில் துளிர்கிறது.
எல்லோரையும் உறவாக எண்ணும் உன் சிந்தையை காணுகையில் நெஞ்சம் அன்பில் நிறைகிறது,
அளவில்லாமல் நீ காட்டும் அன்புப்பிற்கு துரோகம் செய்பர்களை பார்த்தால் துயரம் பெருகுகிறது,
யார் எவ்வாறு இருதாலும் அவர்களை மன்னிக்கும் உன் உயர்ந்த குணம் என்னுள் தூய்மையை விதைக்கிறது.
வாழ்க்கையில் உன்னை போல வாழ நான் இன்னும் நிறைய தூரம் பயணிக்க வேண்டும் துணிவோடு,
எல்லா பெருமையும் உன்னை சேரும் படியாக வாழ்வில் முன்னேறுவேன் நம்பிக்கையுடன்,
என் அன்பு அன்னையே உன் வளர்ச்சியில் கற்றேன் விடாமுயற்சி என்ற உயர்ந்த குணத்தை.
