தூது
தூது
கடிதத்தின் வழி வந்ததடி
நினைவுகளின் தாக்கம்
சலனமற்ற இரவின்
நிசப்தத்தைக் கிழித்துக்கொண்டு
இன்னும் இன்னும்
நேசிக்க சொல்கிறதடி
இருளில் ஒளிரும்
வெள்ளி நிலா
மனமென்னும் கூட்டில்
நிறைத்து கொண்டேனடி
உன் புருவம்
தீட்டும் கோலங்களை
இந்த நிமிடம் நீளத்தான்
தூது அனுப்புகிறேன்
கண்ணம்மா
காற்றிற்கு...

