துன்ப இன்னல்கள்
துன்ப இன்னல்கள்
மகிழ்ச்சியான தருணங்கள் வந்தவுடன்,
என் இதயத்தில்,
மகிழ்ச்சியற்ற கடனின் மலைகளை
நாங்கள் தொடர்ந்து எழுப்புகிறோம்,
சில நேரங்களில் சிரிக்க வேண்டும்
சில நேரங்களில் அழவேண்டும்
சில நேரங்களில் சிரித்துக் கொண்டே அழவேண்டும்
சிலநேரங்களில் அழுதுகொண்டே சிரிக்க வேண்டும்
இவையெல்லாம் வாழ்வின் பரிணாம மாற்றங்கள்
அதுவும் மற்றவரின் கடனில்,
ஒரு ரகசியம் சொல்லுங்கள்? ...
என் கண்களில் இன்னும் கண்ணீர் இருக்கிறது
கைவிடப்பட்ட வாகனங்கள்,
கைவிடப்பட்ட சொத்து சுகங்கள்
இன்னும் சொல்லப்போனால்
கைவிடப்பட்ட பாத்திரங்கள்
பித்தளை பாத்திரங்கள்
அடகு பாத்திரங்கள்
ஏனென்றால் அவர்களுக்கும் தெரியும்,
சில நேரங்களில் கடன் மாற்றங்கள்
செய்யப்பட வேண்டும் ..
ஏழைகளின் வாழ்க்கையில்தான்
எத்தனை இன்னல்கள்
மகிழ்ச்சியான மின்னல்கள் இல்லாவிட்டாலும்
துன்ப இன்னல்கள் தான் எத்தனை எத்தனை?????
