தனிமையின் பிடியில்...
தனிமையின் பிடியில்...
வானமும் மேகமும் வளைந்து என் வார்த்தைகளுக்கு வாக்கியமானது,
வயதும் வசிகரமும் தடைபட்டு இயற்கையும் நீதான் இசைவாயென இன்பமுறச் செய்தது,
தவிப்போ திகைப்போ பயனற்று வன்மத்தை வதைக்கும் தனிமையின் பிடியில் யாதும் அழகென்றானது
பூவும் தேனும், வானும் மழையும், மதியும் பிழையும், உணவும் சுவையும் பிரியாதது போல
நீயும் நானும்
தனிமையே
நீயும் நானும்...
-தனிமையின் பிடியில்...
