STORYMIRROR

StoryMirror Feed

Classics

3  

StoryMirror Feed

Classics

திருக்குறள் 101. நன்றியில் செல்வம் - மு .வா உரையுடன்

திருக்குறள் 101. நன்றியில் செல்வம் - மு .வா உரையுடன்

1 min
165

1001. வைத்தான்வாய் சான்ற பெரும்பொருள் அஃதுண்ணான்

செத்தான் செயக்கிடந்தது இல்.


மு.வரதராசனார் உரை:

ஒருவன் இடமெல்லாம் நிறைந்த பெரும் பொருளைச் சேர்த்து வைத்து அதை உண்டு நூகராமல் இறந்து போனால் அவன் அந்த பொருளால் செய்ய முடிந்தது ஒன்றுமில்லை.


1002. பொருளானாம் எல்லாம்என்று ஈயாது இவறும்

மருளானா மாணாப் பிறப்பு.


மு.வரதராசனார் உரை:

பொருளால் எல்லாம் ஆகும் என்று பிறர்க்கு ஒன்றும் கொடுக்காமல் இறுகப்பற்றிய மயக்கத்தால் சிறப்பில்லாத பிறவி உண்டாம்.


1003. ஈட்டம் இவறி இசைவேண்டா வாடவர்

தோற்றம் நிலக்குப் பொறை.


மு.வரதராசனார் உரை:

சேர்த்து வைப்பதையே விரும்பிப் பற்றுள்ளம் கொண்டு புகழை விரும்பாத மக்கள் பிறந்து வாழ்தல் நிலத்திற்கு பாரமே ஆகும்.


1004. எச்சம்என்று என்எண்ணும் கொல்லோ ஒருவரால்

நச்சப் படாஅ தவன்.


மு.வரதராசனார் உரை:

பிறர்க்கு உதவியாக வாழாதக் காரணத்தால் ஒருவராலும் விரும்பப்படாதவன் , தான் இறந்த பிறகு எஞ்சி நிற்பது என்று எதனை எண்ணுவானே.


1005. கொடுப்பதூஉம் துய்ப்பதூஉம் இல்லார்க்கு அடுக்கிய

கோடிஉண் டாயினும் இல்.


மு.வரதராசனார் உரை:

பிறர்க்கு கொடுத்து உதவுவதும் தான் நுகர்வதும் இல்லாதவர்க்கு மேன் மேலும் பெருகிய பல கோடிப் பொருள் உண்டானாலும் பயன் இல்லை.


Rate this content
Log in

Similar tamil poem from Classics