திறக்க முடியுமா?
திறக்க முடியுமா?
அடைப்பட்ட இதயத்தின் அறைக் கதவுகளை
எந்த சாவி கொண்டு நீ திறப்பாய்?
உருவிழந்த சாவிக்கு
உயிர் கொடுத்தாலும் பலனில்லை.
மூடிய அறைகளின் வாயிலை
வெறுப்பினால் இறுக அடைத்தாய்
அலுக்காமல் தட்டிய கைகளுக்கு
தோல்வி எனும் வலி கொடுத்தாய்
என்றோ நான் தொலைத்துவிட்ட
காதல் சாவியை
இன்று நீ கண்டுபிடித்தாய்
வாழ்க்கையின் சோகத்துரு ஏறிய
அந்த சாவியால் பயனில்லை
மூடிய இதய அறைக்கதவுகளைத்
திறந்திட வேண்டும்
ஒரு புதிய சாவி தான்.