தாய்மை
தாய்மை
தன்னலமற்ற வடிவம் தாய்மையின் ஒப்புமை !
கருவுற்ற அத் தருணமே தன்னை மறப்பாள்
மகவை ஈன்றெடுக்க ஈரைந்து மாதம் தவமிருப்பாள்
தன் ஊனுயிர் இரண்டும் கலந்து பெற்றெடுப்பாள்
தியாகத்தின் உருவாய் அவள் மக்களை காப்பாள்
கவலைகளை மறந்து கட்டி அணைத்து முத்தமிடுவாள் !
தன் கனவுகளை கருவாக்கி
பால் மனதை பண்பாக்கி
பிஞ்சு நெஞ்சை பதமாக்கி
தவழும் மழலையை தளிராக்கி
பெற்ற பிள்ளையை ஆளாக்கி
அழகு பார்ப்பவளும் அன்னையே !
நம் கண்ஜாடையில் தேவையை அறிபவள
்
நம் கை அசைவில் முற்றும் உணர்பவள்
நம் வழிப் பாதையில் கவசமாய் ஒளிர்பவள்
நம் இமை ஈரம் சொரிவதற்குள் துடைப்பவள்
நம் உதடு மொழிவதற்குள் எண்ணத்தை பிரதிபலிப்பவள்
நம் வாழ்நாள் வழிகாட்டியாய் வருபவளும் அன்னையே !
அவள் தைரியம் தோற்றுப் போகும் நம் கால் இடறயிலே
அவள் கண்களும் கலங்கிப் போகும் நம் மனம் வாடுகையிலே
அவள் பிடிவாதம் தகர்ந்து போகும் நம் கள்ளச் சிரிப்பிலே
அவள் உள்ளம் குளிர்ந்து போகும் அம்மா என்று அழைக்கையிலே !!!