பயணம் !
பயணம் !
வாழ்வின் அந்தமாய்
வழிநடத்தும் அங்கமாய்
மலரும் ஞாபகமாய்
முடிவில்லா தொடக்கமாய்
தொடருவதே பயணம் !
தத்தி தவழ்ந்து ஆரம்பம் ஆவது பயணம்
தடி ஊன்றி நடப்பினும் நில்லாது தொடரும்
பாய்மர படகிலோ
பாய்ந்தோடும் மோட்டார்வண்டியிலோ
பறக்கும் இரயிலிலோ
பலவண்ண காரிலோ
ஊர்ந்துசெல்லும் மிதிவண்டியிலோ
உலாவரும் நகரப் பேருந்திலோ
விண்ணைத்தொடும் விமானத்திலோ
மேற்கொண்ட ஒவ்வோர் பயணமும்
அளவற்ற நினைவுகளாய்
அசைபோடும் பொழுதுகளாய்
நம்முள் என்றும் சிறகடிக்கும் !
தோலை தூரம் சென்றாலும்
தொடுவானம் கடந்தாலும்
சற்றும் சளைக்கவில்லை
இளைப்பாறும் எண்ணமில்லை
முற்றும் எனத் தோன்றவில்லை !
சிறுமணித்துளிகள் பயணித்தாலும் சிற்றின்பம் பொதிந்திருக்கும்
பெருமைல்கல்கள் கடந்தாலும் பேராசை நிலைத்திருக்கும்
காற்றை மிஞ்சி கடக்க தோன்றும் நம் கால்கள் பயணிக்கும் பொழுது
காலம் கடந்து இன்புற்று பயணிப்போம் நம் கனவுகள் நனவாகும் என்று !!!