பொறுமையாய் இரு
பொறுமையாய் இரு


பார்க்கும் போது ஒரு அழகான சிரிப்பு, பேசும்போது அன்பான வார்த்தை, கனிவான வார்த்தை, பார்க்கவும் பேசவும் முடியாத போது சின்னதா ஒரு மெசேஜ், அதுதான் நட்பு. பாசமான உண்மையான நட்பு.
சோகத்தை சொல்லுபவர்களை விட சொல்ல முடியாமல் மனதிற்குள் புழுங்கிக் அழுபவர்கள் தான் அதிகம். வானிலையை விட வேகமாக மாறுகிறது மனிதனின் மனநிலை. வலுக்கட்டாயமாக உறவுகளை நம் வாழ்க்கையில் தங்க வைத்து அவர்களின் போலியான அன்பு வருவதைக் காட்டிலும் தனிமை எவ்வளவோ மேல்.
நீ எவ்வளவு உயர்ந்தவள் என்பது உன் படிப்பிலும் பணத்திலும் அல்லது உன் அறிவியல் அல்ல, மற்றவர்களை எப்படி நீ மதிக்கிற என்பதில்தான் உள்ளது. வெயில் காலத்தில் சூரியனை திட்டுவார்கள் அதே மனிதர்கள் மழை காலங்களில் அதை அழைக்கிறார்கள் அதேபோல் இன்றும் உன்னை வெறுத்தவர்கள் நாளை உன்னை தேடி உன் இருப்பிடம் வருவார்கள் அதுவரை காத்திரு பொறுமையாய் இரு.