STORYMIRROR

Uma Makeswari M

Inspirational Others

4  

Uma Makeswari M

Inspirational Others

பெண்ணே எழு...

பெண்ணே எழு...

1 min
198

#seedhibaat #நேரடியான பேச்சு


உள்ளொன்று வைத்துப் புறமொன்று காட்டி 

கள்ளக்கயவர் போல் மெய்யினை மறைத்து 


தாமரையிலை நீராய் ஒட்டாது உறவாடி 

இமயமெனப் பொய்மைகளை அரங்கேற்றி 


என்னுயிரும் நீயாம் உன்னுயிரும் நானாமென 

உன்னறிவைக் கெடுத்து உள்ளுக்குள் நகைத்து 


காதலெனும் கெட்ட வலை விரித்து 

பாதகஞ் செய்யக் காத்திருப்பாரடி.. 


பேதைப் பெண்ணே விழித்துக் கொண்டு 

பதைக்காமல் நடை போடடி.. 


Rate this content
Log in

More tamil poem from Uma Makeswari M

Similar tamil poem from Inspirational