பெண் ரோபாட்-2050
பெண் ரோபாட்-2050




உன் கண்ணழகு
விண்ணைத்
தாண்டி என்னைக்
கவர்ந்தாலும்
சாதி எல்லை
தள்ளி நிற்கச்
சொல்லுதடி!
உன் உதட்டழகு
ஆயிரம் மாதுளைக்கு
சமம் என்றாலும்
உன் மருத்துவர் படிப்பு
உன்னை அண்ணாந்து
பார்க்கச் சொல்லுதடி!
கருப்புதான் நீ என்றாலும்
சிவப்பான என் உடல்
உனக்காக காத்திருக்கிறது
என்றாலும் படிக்காத
விவசாயிமுத்திரை
உன் பெற்றோர்களால்
இன்னமும் அங்கீகாரம்
ஆகாமல் கிடப்பதன்
காரணம் புரியாமலே
இரவெல்லாம் வானத்து
நட்சத்திரங்களை
உன்னிடம் தூது அனுப்ப
வானவில்லிடம் ஒப்பந்தம்
செய்திருக்கிறேன்!
நீ வளர்த்த ஜல்லிக்கட்டு
காளையை அடக்கி
உன்னை என் துணையாக்க
எத்தனிக்கும்போது உனக்கு
ஏனிந்த தமிழ்வழி
மருத்துவம் துணையாக
வந்ததோ என்றே நானும்
கவலைப்பட்டே
2050இல் பயணித்துக்கொண்டிருக்கிறேன்!