பாரத நாட்டிற்கு இணை பாரத நாடே
பாரத நாட்டிற்கு இணை பாரத நாடே


பாரத நாட்டிற்கு இணை பாரத நாடே
பாருல கறியுமே இதற் கில்லை ஈடே
புத்தர், பரம ஹம்சர் இங்கவதரித்தார்
கவி காளிதாசன் கம்பனும் இங்கு பெரும் புகழ் படைத்தார்
உத்தமர் காந்திஜிக்கு உலகில் யார் உவமை
உயர் கலைக்கோயில்கள் காட்சி கொள் பழமை .
சிற்பமும் ஓவியமும் சிறுவரும் அறிவார்
பற்பல கலைக்குப் பிறந்த வீடு இதுவே
அற்புத நடனத்தில் அரம்பையர் நிகர்வார்
கற்பெனும் விலையில்லா பொற்பணி அணிவார்
காவிரி கங்கை யமுனை ஆறுகள் இங்கே
கயிலையும் இமையத்தின் எவரெஸ்ட்டும் இங்கே
தேவர் சொல் திருக்குறள் கீதையும் இங்கே
தேனினும் இனிய திருவாசகமும் இங்கே
பாரத நாட்டிற்கு இணை பாரத நாடே