நுழைந்துவிட்ட நுண்ணுயிர்
நுழைந்துவிட்ட நுண்ணுயிர்


ஓராயிரம் அறிவுரைகள் தந்தார்கள்
ஒவ்வொரு நாட்டின் அரசாங்கங்கள்
ஓதி மறவாமல் கடைபிடியுங்கள்
ஒதுக்கமாக முழுமையாக என்றார்கள்
ஓங்கானமாய் ஏற்க முயன்றார்கள்
ஒவ்வாத காலக்கட்டுமுறைகள்
ஓடி உழைத்த வர்க்கங்கள்
ஒழுங்காக கட்டுப்பட எத்தனித்தார்கள்
ஓடிக்கொண்டிருக்காமல் நின்றன விமானங்கள்
ஒழுக்கசீல மாணவர்கள் பள்ளிக்குச்செல்ல நின்றார்கள்
ஓயாமல் இயங்கிய வாழ்க்கைகள்
ஒளிந்து வாழக் கற்றார்கள்
ஓசையின்றி உலவும் நவீன கிரு மிகள்
ஒவ்வொருவரையும் உலுக்கி பயமுறுத்தும் சர்வதேச பரவல்
ஓய்த்துக்கட்ட வந்தன எத்தனையோ நாசினிகள்
ஒழிந்து துரத்த மக்கள் முயல்கிறார்கள்
ஓய்ச்சலின்றி வைத்தியம் பண்ணும் மருத்துவர்கள்
ஒருவர்கூட விடாமல் கவனிக்கிறார்கள்
ஓடாய் உழைக்கும் செவிலியர்கள்
ஒட்டகம் போல் நீரும் இரையும் எடுத்து காக்கிறார்கள்
ஓடங்களில் கடலில் இருந்தவர்களும் காய்ச்சலுற்றார்கள்
ஒச்சையாய் அடங்கின பூமியின் ஊர்கள்
ஓட்டமாக இயங்குகின்றன ஊடகங்கள்
ஒப்புரவாக பகிர்ந்து அளிக்கின்றன தொலைக்காட்சி செய்திகள்
ஓட்டை எங்குமில்லை துரத்த என்கிறார்கள்
ஒவ்வாத இந்த மனிதக்கொல்லியை பரிசோதிப்பவர்கள்
ஓரமாக உட்கார்ந்து யோசனைகளை மேற்கொள்கிறார்கள்
ஒருவராலும் முரண் இல்லாமல் அலச&n
bsp;முயல்கிறார்கள்
ஓய்த்துவிட எத்தனைபேர்கள் எத்தனிக்கிறார்கள்
ஒழியும் நாளை ஏக்கமாக எண்ணுகிறார்கள்
ஓடித் துரத்தும் நீவீன வியாதியின் குறிப்புகள்
ஒதுக்கப்படாமல் சிலர் புகன்ற ஆகாரங்கள்
ஓடனான பேன்டோலின் தான் காரணமென்கிறார்கள்
ஒப்பில்லாமல் சூழ்கிறது விஞ்ஞானங்கள்
ஓடு இல்லாத வவ்வாலையும் சந்தேகிக்கிறார்கள்
ஒப்பீட்டளவில் வேறுபடுகிறார்கள்
ஓடித்தடி கொண்டு விரட்ட முயல்கிறார்கள்
ஒட்டுமொத்தமாக அழிக்கப்பார்க்கிறார்கள்
ஓடியவோடம் ஊதி பூஜைகளில் மூழ்கிறார்கள்
ஒற்றமையான மனிதக்குலங்கள்
ஓடயாடி அடங்கியது வாழ்க்கைமுறைகள்
ஒலிகள் இன்றி பரப்புகளின் நிசப்தங்கள்
ஓவென்ற குரலில் தொழுகிறார்கள்
ஒப்பாரியில் நிறைய பந்தங்கள்
ஓர் பழமொழியை நினைவுபடுத்துங்கள்
ஒரு அந்திக்கருக்கலில் வரும் அன்னியன்கள்
ஓர் விடியக்கற்கலில் மாய்ந்துவிடும் பகைவன்கள்
ஒரு ஏட்டிலும் இல்லாத பிணிகள்
ஓட்டுப்போட்ட சர்க்கார்கள்
ஒருமித்து பணங்களை முடக்குகிறார்கள்
ஓ போட்டு ஏற்றிவிடலாம் சர்த்திரங்கள்
ஒற்றை தடுப்பு ஊசியின் கண்டுபிடிப்புகள்
ஓயுமா இந்த நுண்ணுயிர்கள்
ஒழுகும் மனிதனின் கண்ணீர்கள்
ஓய்வெடுத்துத் துயிலலாம் அந்த நாட்கள்
ஒளிருவோமே எங்கள் இனங்கள்.
- மீரா பானு காஸீம் கான்.