மதம்
மதம்
💟☮️✝️ மதம் ☪️🕉✡️
மதத்தின் மீது நாம் ஒருபோதும் மமதை கொள்ளவேண்டாம்
மதத்தால் மதமும் பிடிக்கவேண்டாம்
மயக்கி நம்மை ஆட்டவும் வேண்டாம்
மதத்திற்காக மனிதன் பிறக்கவில்லை
மறந்தும் அங்ஙனம் நினைப்பது தவறு
மதம் நம்மை மனிதனாக ஆக்கட்டும்
மருளும் மிருகமாக்கவேண்டாம்
மதம் மனதைப் பக்குவப்படுத்தவே
மதியால் இதனை உணருவோம்
மதப்பேய் கொடூரமானது
மந்தமாக்கிக் கவிழ்த்து விடும்
மதநோய் மனநோயாகி
மக்கி மூழ்கடிக்கும்
மதங்களின் போதனைகள் நம்மை
மக்குகளாக்குவதற்கில்லை
மதத்தின் கதவுகள் வாழ வழிகாட்டும்
மறைகளை தருவித்து
மதநெறிகளை வாரித்தந்தும்
மனித குலம் தடுமாறுகிறதே
மத நூல்களை நன்கு புரிவோம்
மருந்துகள் நிறைய உள்ளவை அவை
மதப்பெருமக்களும் குருக்களும்
மணி அடித்துச் சொல்ல வேண்டாம்
மதச் சீரமைப்புகள் ஒவ்வாதது
மனித குலத்தை குழப்பிவிட்டது
மதங்களுக்கு உள்ளேயும் மற்ற
மதங்களுக்கிடையேயும் பிரிவினை வருத்தி
மதத்தின் மேலேயே தாழ்வுகள் காட்டி
மங்கலாக்கி இருட்டடிப்புச் செய்து
மத நல்லிணக்கங்களை
>
மல்லாந்து சாய்த்துகிறது
மதமே தேவையில்லை என்ற
மட்டுக்கும் ஒரு இளைய தலைமுறை
மதம் வேண்டாமென்று
மறுக்கும் அளவுக்கு
மதம் எடுத்துச்சென்று
மலிந்தும் ஆகிவிட்டது
மதம் முதிர்ச்சியைக் கொடுத்து
மகுடங்கள் வைக்கட்டும்
மதங்கள் தோன்றலால் பலப்பல
மனிதகுலம் ஒன்றே
மதங்கள் போதிப்பதும் ஒன்றே
மக்களின் ஏக இறைவன் ஒருவனே
மதங்களின் நன்மலர்களை முகர்ந்து
மணமாக வாழ்ந்த நம் முன்னோர்கள்
மத ஒழுக்கங்களை நிறபற கற்று
மதித்தும் இறையை தொழுதும்
மதத்தாலேயே நந்நடத்தைகொண்டு
மறந்தும் பிறரைப் பகைக்காமல்
மதத்தால் மேன்மக்களாக
மறையாமல் நம் நினைவில்
மதத்தையும் வாழவைத்து இலக்கிய
மறைகளும் பாவித்து பாடி
மத இலக்கியங்களும் புனைந்து
மாலைக் காற்றாக வலம் வர
மதத்தோல் போர்த்தினால்
மரித்துவிடுவோம் முகராமல்
மத முனைப்புகளை அடக்கி
மண்ணிற்கே பிறந்த மனிதனாக
மதவாதிகளாக இல்லாமல் மிதவாதிகளாக இருப்போம்
மதமாக வாழாமல் மிதமாக வாழ்வோம்
மதம் வாழ்வதற்கே
மதம் வீழ்வதற்கல்ல.
- மீரா பானு காஸீம் கான்.