நட்சத்திரங்களில் நீ
நட்சத்திரங்களில் நீ
பல நட்சத்திரங்களை படைத்த இறைவன்,
ஏன் எனக்கு உன்னைக் கொடுத்தார்?
எல்லா நட்சத்திரங்களை விட நீ சிறந்தவளா?
என்று இறைவனிடம் கேட்டேன்.
என் மன்றாட்டில் எப்போதும் உன்னை
இறைவனிடம் குறை கூறுவதே என்
ஜெபம் ஆனாது.
மற்றவர்களால் நீ புகழப்படும் பொழுது
நான் முகம் வாடிய ரோஜாவைப் போல
மாறியது.
நீ கொடுங் சொற்களால் என்னை
காயப்படுத்தினாய்,
ஆனாலும் நீ இறைவனுக்கு மிகவும்
பிரியமாவள் ஏன்?
பல வருடங்களுக்கு பிறகு,
நீ யார் என்று உணர்ந்தேன்,
என் அருகில் வாசிக்கும்
மங்காத நட்சத்திரம் நீ!!
