நோயும் மருந்தும்
நோயும் மருந்தும்
தீர்வனவும் தீராத் திறத்தனவும் செய்ம்மருந்தின்
ஊர்வனவும் போலாதும் உவசமத்தின் உய்ப்பனவும் யார்வினவும் காலும் அவைமூன்று கூற்றவா
நேர்வனவே ஆகும் நிழல்இகழும் பூணாய்
பேர்தற்கு அரும்பிணி தாம்இவை அப்பிணி
தீர்தற்கு உரிய திரியோக மருந்துஇவை
ஓர்தல் தெளிவோடு ஒழுக்கம் இவையுண்டார்
பேர்த்த பிணியுள் பிறவார் பெரிதின்பமுற்றே
