STORYMIRROR

Shakthi Shri K B

Drama Romance Classics

4  

Shakthi Shri K B

Drama Romance Classics

நீங்க நாள்

நீங்க நாள்

1 min
390

காலங்களில் என்னக்கு மிக பிடித்த காலம் அது,

இந்த நாள் இன்னும் நீளாத என்ற ஏக்கம் மனதில்.

குளிர் அதிகமாக தெரிந்தாலும் உள்ளத்தின் உற்சாகம் பல மடங்கு.


அவளின் அன்பு கலந்த தேநீர் அத்துடன் அந்த சுவையான சிற்றுண்டி,

அவ் இரண்டையும் அவள் உன்ன கொடுப்பதும் மாலை நேரம் பொங்க,

அடடா இது அல்லவா சிறப்பான வாழ்கை.


வருடங்கள் பல கடந்தாலும் அவளின் அழகு குறையவில்லை,

இன்றும் அதே புது மணப்பெண் போல இருக்கும் என் துணைவி,

என் வாழ்க்கையின் ஒளி விளக்கு இருக்கும் பொது குளிர் தோற்றுவிடும்.


மாலை பொழுது நெருங்க அவள் தோட்டத்தில் உள்ள மலர்களை ரசிக்க,

அவளை பார்க்கும் தருணத்தில் அந்த சூரிய கதிர் வீச அவள் முகம் மின்ன,

அட அந்த ஒவ்வொரு நொடியும் மனதை மகிழ்ச்சி பெற செய்யும்.


அவளின் தேநீரை பருக அதன் ருசிக்கு முன் குளிர் கால மாலை பொழுது 

ஒரு தன்னிகரற்ற அழகான மாலையாக தெரியும்,

குளிரும் சூடான தேநீரும் ஒன்றிணைந்து என்ன ஒரு புரியாத பபுத்துணர்ச்சி.


கண்கள் சற்று அவளை தாண்டி பார்க்க எங்கள் பேரக்குழந்தைகள் பக்கம் திருப்பியது,

எப்படி அறிந்தால் என இன்று வரை புலப்படவில்லை அந்த கண்களின் அன்பு கோவம்,

அதை கண்டும் காணாது போல நான் இருக்க சிற்றுண்டியை மெல்ல வாயில் நழுவ 


நானும் அன்று அவளிடம் நழுவ முயன்றேன் ஆனால் முடியவில்லை,

அன்பு துணையிடம் மண்டி மன்னிப்பு கோரினேன் அவளின் 

சின்ன புன்னகை அந்த குளிர் கால மாலை பொழுது போல 

நீங்காமல் ஒட்டி கொண்டது அவளின் முகத்தில்.


 என் நினைவில் நீங்க இடம் பிடித்த நாள் அன்று,

அது போன்று வேறு ஒரு நாள் வருமா என் வாழ்வில் 

என ஏங்கி தவிக்கிறேன் அவளின் மறைவுக்கு பின்.



Rate this content
Log in

Similar tamil poem from Drama