நீ இருந்தால்
நீ இருந்தால்
வண்ணங்களாய் நீ இருந்தால்,
உன்னை தீண்டும் தூரிகையாய் மாறிடுவேன்,
மேகமாய் நீ இருந்தால்,
உன்னூள் உறையும் மழைத் துளிகளாய் மாறிடுவேன்,
மலையாக நீ இருந்தால்,
உன்னை தீண்டும் தென்றலாய் மாறிடுவேன்,
நீராய் நீ இருந்தால்,
நீ செல்லும் பாதையாகிடுவேன்,
மரங்களாய் நீ இருந்தால்,
உன்னை ஏந்தும் மண்ணாய் இருப்பேன்,
கடலாக நீ இருந்தால்,
உன்னை அணைத்திடும் கரையாக இருப்பேன்,
இவ்வாறு எந்த உருவில் நீ இருந்தாலும்,
உன்னை சேர்ந்தே இருப்பேன்.....