நா மு [1975-2016]
நா மு [1975-2016]


உன் வரிகளின் வீரியம்
விந்தைகளின் விளையாட்டோ?
விருதுகள் உன்னை தொட
வழிநெடுக வரிசையில் நிற்க..
வேற்று கிரகத்திலும் தமிழின்
வேர் பதிக்க சென்றாயோ?
வார்த்தை விளையாட்டை
வாழ்நாளில் ஆடியவனே
வார்த்தைகளை தீர்த்துவிட்டால்
என்ன செய்வார் பின்வருவோர்
என்றெண்ணி போனாயோ?
வலிகளையும் ரசிக்க வைத்தாய்
உன் வார்த்தைகளின் சாதூர்யத்தால்.
பெருங்கவிஞர் கூட்டம்
அங்கொன்று வீற்றிருக்க
விரைவாக ஏன் வந்தாய்
என்றுதான் வினவுமே! என்சொல்வாய்?
எழுத்துக்கான மூலக்கூறு
மனித உணர்ச்சிகளில்
மிக கணிசமாக உள்ளதென்றா?
வாலியும், தாசனும் வாஞ்சையுடன்
வாழ்த்துச் சொல்ல
உலகை படைத்தவர் மத்தியில்
கவிதை வகுப்பெடுத்து
களைத்துத்தான் போவியோ!