Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!
Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!

KANNAN NATRAJAN

Abstract

3  

KANNAN NATRAJAN

Abstract

முதியோர் ஆற்றாமை

முதியோர் ஆற்றாமை

1 min
167


 நண்பா! நண்பா!

 என்றே பேச அவகாசம் எனக்கு

அதிகமாக இல்லையே!

பிள்ளை வளர்ப்பு குடும்பப் பொறுப்பு

இயந்திரச் சக்கர காலத்தில் ஓய்வுகால

இடைவெளியில் மழலைகளுடன்

பேசியதில் காலம் போனதை வருந்தி

சமையல்அறையே நண்பனாக

தையல்இயந்திரமும் தோழியாக

நட்பு வட்டம் உருவாகியதே!

பேச்சுகள் கலையாக உருவாக

கலைகள் அழகாக மாறிடவே

ஆண்டுகள் பல ஓடிடவே

சமையல்போட்டி

உதித்திடவே யாருக்கும் நானும்

சளைக்கவில்லை என்றே

மழலைகளுடன் நானும்

பங்கெடுத்து பரிசுடன்தான் வந்தேனே!

கற்ற கலைகள் நண்பனாக

சங்கிலியடன் பிணைந்த காம்புத்தையல்

பூக்கள் மகிழ்ச்சியில் எனது கைகளைக் குலுக்கி

விரல்களை முத்தமிட்டனவே!

போட்டிகள் என்பது பொதுவென

இங்கு யார் உரைப்பர்!

மனதில் முட்கள்

தலைமுறை இடைவெளியாக தை்துவிட

நாங்கள் பேசுவதைக் காதுகொடுக்க யார்

வருவார்!!!





Rate this content
Log in

Similar tamil poem from Abstract