மரியாதை
மரியாதை
களவு போகுமென்று
கள்ளாப் பெட்டியை
ஒழித்து வைத்து
மேசையை தட்டி
வேலை வாங்கி
நேரம் தவறி உணவு எடுத்து
ஓங்கிய கைகள்.
வயதை மறந்து
வணங்கும் முறையை
மறந்தாயே!
மாடியில் நின்றாலும்
உன்னுடல் என்றும்
ஆறு அடியில் அடங்கிடுமே.
