மனது தொலைந்த காதல்
மனது தொலைந்த காதல்
என்னுடையவன் என்று உன்னை
எண்ணி, நான் உன்னை நெருங்க நினைக்கும்
ஒவ்வொரு பொழுதிலும்,
உன் கண்களில் நீ சொல்லி விடுகிறாய்—
"நீ அவளுடையவன்" என்று.
திருமணம் என்னும் பந்தத்தால்
இனைந்த உன்னுடன்,
என் மனம் ஏனோ சற்று பொறாமை கொள்கிறது,
அவளை பார்த்து.
நானும் உன் முன் காதலியாக
இருந்திருக்கலாம் என்ற ஆவலுடன்.
உன்னுடன் தான் இருக்கிறேனே தவிர,
உன் மனதில் நான் இல்லை என்ற ஏக்கத்தோடு.
- என்றும் உன் அன்புக்காக ஏங்கும் மனைவி

