STORYMIRROR

Kasthurirangan Lakshminarasimhan

Abstract

4  

Kasthurirangan Lakshminarasimhan

Abstract

மனித உயிர் பற்றிய கவிதை

மனித உயிர் பற்றிய கவிதை

1 min
849

நேற்று என்பது நிஜமில்லை, நாளை என்பது நிச்சயமில்லை

இன்று வாழ்ந்தால் மட்டுமே உண்மை, இங்கு உண்டாக்கி விட்டவர்கள் ரெண்டுபேரு

கொண்டு வந்து சேர்த்தவர்கள் நாலு பேரு, வீதி வரை செல்லும் வரை நூறு பேரு,

உயிர் உடலைவிட்டு போன பின்னே கூட யாரு?

சொந்தமும்! பந்தமும் ! இங்கு சேர்த்தவர் யாரு…

சேர்த்துவிட்டு பாதியில் பிரிப்பதும் யாரு..

வளர்ந்த நெஞ்சங்கள் பிரிந்த போதிலும் வருத்தம் தந்தவர் யாரடா..

மனித வாழ்விலே துயரம் யாவுமே மனதினால் வந்த நோயடா..

வாழும் நாளிலே கூட்டம் கூட்டமாய் வந்து பார்த்தவர் யாரடா!

வாழும் போது..தன் சிரிப்பினால் எல்லோரையும் மயங்க வைத்தவர் தானடா,

மரணம் ஒன்றுதான் முடிவு என்றபின் பந்தபாசம் ஏனடா,

பதறும் நெஞ்சினை அணைக்கும் யாவரும் சொந்தம். பந்தம்.. தானடா..


Rate this content
Log in

Similar tamil poem from Abstract