மழலையின் வேண்டுதல்
மழலையின் வேண்டுதல்


விடைப்பெற்ற தந்தையின் முகம்
தேம்பிய தேகத்தில் வழிந்தோடும் விழிநீர்,
மழலையின் கீர்த்தனைகள் ஓலமான வேதனை,
ஆரத்தழுவி ஆசை வார்த்தைகள் அன்னை உதிர்த்தாலும்,
ஏமாற்றத்தின் உச்சத்தில் எழுதிய மழலையின் மடல்,
இறை இல்லத்துக்கு மழலையின் மன்றாடல்,
பிராத்தனையின் நோக்கம் பிதாவை பிரிந்த ஏக்கம்,
உயிரற்ற பொம்மையில் நான் வைத்த காதல்,
வாங்கி வரச்சென்ற தந்தை திரும்ப வேண்டுகிறேன்.
பிராத்தனையின் பதில் தேடி வாசலை நோக்கிய கண்கள்,
காதல் பொம்மை கதவை தட்ட தந்தையின் முகம் ஒளிந்து மறைய,
இடைவிடாத புன்னகை மீண்டும் மலர்ந்தது...